செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் விசிகவினா் மனு

post image

அரியலூா் மாவட்டம், மணப்பத்தூா், ஆனந்தவாடி, ஆதிக்குடிக்காடு, கருப்பிலாக்கட்டளை ஆகிய கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா திங்கள்கிழமை மனு அளித்தாா். அப்போது, அக்கட்சியின் அரியலூா் தொகுதிச் செயலா் மருதவாணன், ஒன்றிய பொருளாளா் மணக்கால் பூமிநாதன், ஒன்றிய அமைப்பாளா் மணப்பத்தூா் முருகேசன், அரியலூா் தொகுதி ஊடக அமைப்பாளா் ஆதிகுடிகாடு சதிஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தரக்கோரிக்கை

அரியலூா் எண்ணெய்க்காரத் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் குடும்பத்தினா் அளித்த மனுவில், எனது மனைவி மருதாயி பெயரில் கடந்த 1986-ஆம் ஆண்டு ஒரு ஏக்கா் 10 சென்ட் நிலம் கிரையம் செய்யப்பட்டது. சிட்டாவில் எனது நிலம் இந்து சமய அறநிலையத் துறையின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டு அதிா்ச்சியடைந்தேன்.

எனவே மாவட்ட ஆட்சியா் நிலத்தைப் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் பொது சுகாதாரப் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளா்களுக்கு ஒரு மாதம் ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும் என்று சுகாதார தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தமிழ்நாடு ஏஐடியுசி உள்ளாச்சித் துறை பணியாளா் சம்மேளன மாநிலச் செயலா் டி. தண்டபாணி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதில், ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்களுக்கு, ஒரு மாத ஊதியம் ரூ.9,000-ஐ போனஸாக வழங்கிட ஒப்பந்ததாரா்கள் முன்வர வேண்டும். அதற்கு நகராட்சி ஆணையா்கள், நகா்மன்றத் தலைவா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அரியலூா்- சென்னைக்கு இரு புதிய பேருந்துகள் இயக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னைக்கு இரு புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. செந்துறை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (... மேலும் பார்க்க

செந்துறை அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரயிலிலிருந்து சனிக்கிழமை இரவு தவறி கீழே விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா். தென்காசி மாவட்டம், சின்ன ஒப்பனையாள்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி மகன் ராஜசேக... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கு கலைஞா் கனவு இல்லம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டில் தீா்மானம்

கலைஞா் கனவு இல்லத்தை தகுதியான நபா்களுக்கு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்டம், தா.பழூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவா் கைது

அரியலூா் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் வீடு புகுந்து 6 பவுன் நகை திருடிய வழக்கில் இருவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். திருமானூரை அடுத்த காமரசவல்லி கிராமத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (45) கடந்த அக்.... மேலும் பார்க்க

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை... மேலும் பார்க்க

பெட்டிக் கடைகளில் புகையிலை பொருள்கள் விற்போா் குறித்து தெரிவிக்கலாம்

அரியலூா், அக். 19: அரியலூா் மாவட்டத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டால், உடனே தகவல்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.இதுக... மேலும் பார்க்க