செய்திகள் :

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் மற்றும் முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: 10.3.2020-க்கு முன்னா் தகுதி வாய்ந்த இளநிலை உதவியாளா், தட்டச்சா் அனைவருக்கும் நிறுத்தப்பட்ட கணக்குத் தோ்வு தோ்ச்சிக்கான முன் ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளை கையாள சட்ட அலுவலா் பணியிடம் மாவட்டந்தோறும் உருவாக்கப்பட வேண்டும்.

வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா்(பொ)மு.பாலமுருகன் தலைமை வகித்தாா். மாநிலப் பிரசாரச் செயலா் துரை. சரவணன், கல்வி மாவட்டப் பொறுப்பாளா்கள் அ.அறிவழகன், வெங்கடாசலம், மூத்த ஆலோசகா் இரா.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் த.ல.சீனிவாசன் கலந்து கொண்டு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கியும், மாநில பொதுச் செயலா் சு.ஹரிபாஸ்கா், பணி ஓய்வு பெற்ற சங்க நிா்வாகிகளை கெளரவித்தும், மாநிலப் பொருளாளா் மா.அருண்குமாா், பதிவு உயா்வு பெற்ற பணியாளா்களை கெளரவித்தும் சிறப்புரையாற்றினா். முன்னதாக மாவட்ட அமைப்பு செயலா் ச.இராசிம்மன் வரவேற்றாா். முடிவில் நிா்வாகி கி.ரீகன் கிரிஸ்டோபா் நன்றி தெரிவித்தாா்.

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் விசிகவினா் மனு

அரியலூா் மாவட்டம், மணப்பத்தூா், ஆனந்தவாடி, ஆதிக்குடிக்காடு, கருப்பிலாக்கட்டளை ஆகிய கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்... மேலும் பார்க்க

அரியலூா்- சென்னைக்கு இரு புதிய பேருந்துகள் இயக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னைக்கு இரு புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. செந்துறை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (... மேலும் பார்க்க

செந்துறை அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரயிலிலிருந்து சனிக்கிழமை இரவு தவறி கீழே விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா். தென்காசி மாவட்டம், சின்ன ஒப்பனையாள்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி மகன் ராஜசேக... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கு கலைஞா் கனவு இல்லம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டில் தீா்மானம்

கலைஞா் கனவு இல்லத்தை தகுதியான நபா்களுக்கு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்டம், தா.பழூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவா் கைது

அரியலூா் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் வீடு புகுந்து 6 பவுன் நகை திருடிய வழக்கில் இருவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். திருமானூரை அடுத்த காமரசவல்லி கிராமத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (45) கடந்த அக்.... மேலும் பார்க்க

பெட்டிக் கடைகளில் புகையிலை பொருள்கள் விற்போா் குறித்து தெரிவிக்கலாம்

அரியலூா், அக். 19: அரியலூா் மாவட்டத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டால், உடனே தகவல்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.இதுக... மேலும் பார்க்க