செய்திகள் :

``எல்.முருகனின் விஷமத்தை விட... சீமானின் கருத்து ஆபத்தானது'' - விசிக பொதுச் செயலாளர் அறிக்கை!

post image

விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை..

"விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்திருந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமாவளவன் குறித்துப் பேசிய எல்.முருகன், "அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்? அவரை ஒரு சிறிய கட்சியின் தலைவராகவேப் பார்க்கிறேன்." என்று எல்.முருகன் பேசியிருந்தார்.

எல்.முருகனுக்கு பதிலடி தரும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "திருமாவளவனுக்கு முதல்வராவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. நாங்கள் அவரை முதலமைச்சராக்கிக் காட்டுவோம்" எனத் தெரிவித்தார்.

இதற்கு இடையே, "எல்.முருகனின் விஷமத்தை விட அருந்ததிய மக்களை மொழியால் பிரிக்கும் சீமானின் கருத்து ஆபத்தானது" என்று விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிந்தனைச் செல்வன்

எல்.முருகன் பேசுவது விமர்சனம் அல்ல...

அந்த அறிக்கையில், "நேற்றும் இன்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்தும், தலைவர் தொல்.திருமாவளவன் குறித்தும் பாஜகவை சார்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களும் எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். இக்கருத்துகள் கவனமாக அணுகப்பட வேண்டியவை." எனக் குறிப்பிட்டுள்ளார்.

எல்.முருகன் கருத்து குறித்து, "எல் முருகன் பேசுவது விமர்சனம் அல்ல. அப்பட்டமான பொய்கள் நிரம்பிய அவதூறு." எனக் குறிப்பிட்டுள்ளார்.

"பட்டியல் சமூகத்தினரின் அகில இந்திய அளவிலான அரசியல் திரட்சியை கண்டு கதிகலங்கியுள்ள பாஜக சங்பரிவார கும்பல் அதை உடைத்து சிதைத்திட தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த சதிச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டியல் சமூகத்தினரை கூறு போட்டு குறுக்குச் சுவர் எழுப்புகிற முழு உரிமையும் மாநிலங்களுக்கு அது அளித்துள்ளது. இந்த முயற்சி பட்டியல் சமூகங்களுக்குள் இருக்கிற நலிந்த பிரிவினரை மேம்படுத்துவதற்கு செய்யப்பட்ட ஏற்பாட்டை போல தோற்றமளிக்கலாம். ஆனால் அவர்களின் நோக்கம் உண்மையில் அதுவல்ல, மாறாக பட்டியல் சமூகத்தின் ஒற்றுமையை திரட்சியை சிதறடிப்பது தான் என்பதை மிகத் துல்லியமாக எழுச்சித்தமிழர் அம்பலப்படுத்தி வருகிறார்." எனக் கூறுகிறார் சிந்தனைச் செல்வன்.

திருமாவளவன்

அருந்ததியர் உள் ஒதுக்கீடு..

விடுதலை சிறுத்தைகள் ஆதரவுடன்தான் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சாத்தியமானது என சிந்தனைச் செல்வன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"தமிழகத்தில் உரிய தரவுகளின் அடிப்படையில் நல்ல நோக்கத்தோடு அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டை கலைஞர் கொண்டு வந்தபோது சட்டமன்றத்தில் தலித் மக்களின் பிரதிநிதியாக இருந்த ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே. திராவிட முன்னேற்றக் கழகத்தோடு மிகுந்த தோழமையோடு தலைவர் எழுச்சித்தமிழர் விளங்கினார், தலைவரின் மனம் நிறைந்த ஆதரவு இருந்ததால் தான் தமிழகத்தில் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதை யாரும் மறுத்து விட முடியாது !" என்கிறது அவரது அறிக்கை.

மேலும், "மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துவரும் பாஜக அரசு, பட்டியல் சமூகங்களுக்குள் குறுக்கு சுவர்களை எழுப்பி நிரந்தரமாக சிறுசிறு அடைப்புகளுக்குள் சிதறடித்து விடுகிற உரிமையை மட்டும் மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. அதைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறோம்.

அருந்ததியர்கள் உரிமையில் விடுதலை சிறுத்தைகள் கொண்டிருக்கிற அக்கறையும் கவனமும் வெறும் தேர்தல் வாக்கு அரசியலுக்கானது அல்ல, அது சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை எனும் கொள்கை சார்ந்தது.

எல். முருகன்

விடுதலைச்சிறுத்தைகளை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமான கட்சி என குறுக்க முனையும் பாஜக எல்.முருகனின் அவதூறுகளும் அபாண்டங்களும் ஒருபோதும் மக்களிடத்தில் எடுபடாது. எல்.முருகனால் சாதி ஒழிக என உதட்டளவிலாவது சொல்ல முடியுமா? சாதி மறுப்பு திருமணங்கள் குறித்தும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் தமிழக அரசின் முன்னெடுப்பு குறித்தும் அவரது கட்சியின் கருத்தை அவரால் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்த இயலுமா என்பது போன்ற ஆயிரம் கேள்விகளை அவர் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்." என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சீமானின் கருத்து..

எல்.முருகனின் கருத்தை விட சீமானின் கருத்து ஆபத்தானது என்று கூறிய அந்த அறிக்கையில், "இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்கள் எல்.முருகன் அவர்களை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். அவரது அன்பிற்கு நன்றி சொல்கிற அதே தருணத்தில் விடுதலைச்சிறுத்தைகளை ஆதரிப்பதற்காக ஒட்டுமொத்த அருந்ததிய சமூகத்தையும் தமிழர் அல்லாதவர்கள் என மொழிவழி தேசிய பார்வை கொண்டு சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

சீமான்

பாஜக எல்.முருகன் தெரிவித்த கருத்தை ஒரு அடிமை சங்கியின் தனிப்பட்ட தாக்குதலாக கடந்து செல்லலாம். ஆனால் எங்களை ஆதரிப்பதாக சொல்லி வெளிப்படும் சீமானின் கருத்து ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. வரட்டுத்மனமான மொழிவழி தேசிய பார்வையின் அடிப்படையில் அருந்ததியர்களை தமிழர்கள் அல்ல என வகைப்படுத்துவதை ஒருபோதும் எளிதாக கடந்து போக முடியாது.

அவர்கள் இந்த மண்ணின் குடிகள் அருந்ததியர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஒரு அங்கம்.

சாதி அடையாளத்துடன் அவர்களை பிரிக்கும் எல்.முருகனின் குரலைப்போலவே மொழி அடிப்படையில் எங்கள் உறவுகளை அந்நியர்களாக்குவதை ஒருபோதும் ஏற்க இயலாது.

எங்கள் மீது உள்சாதி அவதூறுகளை அள்ளி தெளிக்கிற எல்.முருகனின் விஷமத்தை விட , எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக இனவாத அடிப்படையில் உழைக்கும் அருந்ததிய மக்களை மொழியால் பிரிக்கும் சீமானின் கருத்து ஆபத்தானது." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

ஒரு லட்சம் இளைஞர்கள்...உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது மைக் பிடித்தவர், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

US Election: ``தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்'' - பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்!

அமெரிக்கா தேர்தல் களம்அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். மறுபக்... மேலும் பார்க்க

``ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்'' - ஆளுநருக்கு ஆதரவாக பிரேமலதா பதிலடி!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகில் சான்றோர்குப்பம் பகுதியில், தேமுதிக நிர்வாகி மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க பிரேமலதா வந்திருந்தார். அடுத்து ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச்... மேலும் பார்க்க

Kalaignar Sports Kit: விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்.. | Photo Album

மக்களுடன் SELFI விழா மேடையில் துணை முதல்வர் மக்களுக்கு வணக்கம் செலுத்தும் காட்சி விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு ... மேலும் பார்க்க

``இந்த தேதிகளில் ஏர் இந்தியா விமானத்தில் செல்லாதீர்கள்'' - காலிஸ்தான் தீவிரவாதி விடுத்த மிரட்டல்!

காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன். நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.பன்னூன் குறிப்பிட்ட தேதிகளில் காலிஸ்தான் இனப்படுகொ... மேலும் பார்க்க

Udhayanidhi: ``2024 தேர்தல் ஒரு செமி ஃபைனல்தான், ஃபைனல் கேமுக்கு ரெடியா இருங்க'' - உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ... மேலும் பார்க்க