செய்திகள் :

``இந்த தேதிகளில் ஏர் இந்தியா விமானத்தில் செல்லாதீர்கள்'' - காலிஸ்தான் தீவிரவாதி விடுத்த மிரட்டல்!

post image

காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன். நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

பன்னூன் குறிப்பிட்ட தேதிகளில் காலிஸ்தான் இனப்படுகொலையின் 40-வது ஆண்டு நினைவும் சரியாக பொருந்திவருகிறது. அந்த தேதிகளில் ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பன்னூன் கூறியிருக்கிறார்.

நீதிக்கான சீக்கியர் அமைப்பின் (Sikhs For Justice - SFJ) நிறுவனரான பன்னூன், கடந்த ஆண்டும் இதேத் தேதிகளில் இதேப் போன்ற எச்சரிக்கைகளை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா விமானம்

கடந்த சில நாள்களாக இந்தியாவின் பல ஏர்லைன்களைச் சேர்ந்த பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலான ஒரு வாரத்துக்குள் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, ஆகாசா என பல முன்னணி ஏர்லைன்களைச் சேர்ந்த 90 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளியாக இருந்தாலும், விமான போக்குவரத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா - கனடா நாடுகள் உறவு நாளுக்குநாள் மோசமடைந்து வரும் தருணத்தில் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் குற்றம் சுமத்தியது முதல் இந்தியா - கனடா உறவு விரிசலடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கனடாவில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைப்பதாக கனட அரசு குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு மிரட்டல் விடுத்தார் குர்பத்வந்த் சிங் பன்னூன். UAPA, மத அடிப்படையில் பிரிவினையைத் தூண்டுதல், குற்ற சதிகளில் ஈடுபடுதல் என பல பிரிவுகளில் அவர் மீது புகார்களை அடுக்கியிருக்கிறது தேசிய புலனாய்வு முகமை.

Sikhs for Justice (SFJ)-யின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பன்னூன்

2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்தார் பன்னூன். டிசம்பர் 11ம் தேதி 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த குடியரசு தினத்தன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குனர் கவுரவ் யாதவ் ஆகியோரை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

SFJ அமைப்பு இந்தியாவிலிருந்து சீக்கியர்களுக்கான தனி நாடு உருவாக வேண்டும் என்று குரலெழுப்பி வருகிறது. இதனால் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு குர்பத்வந்த் சிங் பன்னூனை தீவிரவாதியாக அறிவித்தது வெளியுறவுத்துறை அமைச்சகம்.

முன்னாள் RAW அதிகாரியை தேடப்படும் குற்றவாளியாக FBI வெளியிட்டுள்ள போஸ்டர்

குர்பத்வந்த் சிங் பன்னூன் அமெரிக்கா, கனடா என இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்ற குடிமகனாக உள்ளார்.

SFJ-வை வழிநடத்தும் பன்னூனைக் கொலை செய்ய முயற்சித்ததாக முன்னாள் இந்திய RAW-அதிகாரி விகாஸ் யாதவ் என்பவரைத் தேடி வருகிறது அமெரிக்க விசாரணை அமைப்பான FBI. இதற்காக விகாஸை 'wanted' பட்டியலில் வைத்து போஸ்டர்களும் வெளியிட்டிருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

ஒரு லட்சம் இளைஞர்கள்...உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது மைக் பிடித்தவர், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

US Election: ``தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்'' - பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்!

அமெரிக்கா தேர்தல் களம்அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். மறுபக்... மேலும் பார்க்க

``ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்'' - ஆளுநருக்கு ஆதரவாக பிரேமலதா பதிலடி!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகில் சான்றோர்குப்பம் பகுதியில், தேமுதிக நிர்வாகி மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க பிரேமலதா வந்திருந்தார். அடுத்து ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச்... மேலும் பார்க்க

Kalaignar Sports Kit: விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்.. | Photo Album

மக்களுடன் SELFI விழா மேடையில் துணை முதல்வர் மக்களுக்கு வணக்கம் செலுத்தும் காட்சி விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு ... மேலும் பார்க்க

Udhayanidhi: ``2024 தேர்தல் ஒரு செமி ஃபைனல்தான், ஃபைனல் கேமுக்கு ரெடியா இருங்க'' - உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ... மேலும் பார்க்க

``ஒரே பாடலில் பணக்காரர் ஆவது போல... துணை முதல்வர் ஆகிவிட்டார்'' - விஜயபாஸ்கர் கிண்டல்

சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசும்போது, "தமிழகத்தில் வெற்றி பெற்ற நாடாளும... மேலும் பார்க்க