செய்திகள் :

``ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் செயல்பட அனுமதிக்க முடியாது'' - உச்ச நீதிமன்றம்

post image

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் பத்திரிகையாளராகவும் வேலைபார்த்து வந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் செயல்பட அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக, மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான முன்னாள் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக வழக்கறிஞர் முகமது கம்ரான் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, முகமது கம்ரான் ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் செயல்படுவதை நீதிமன்ற அமர்வு கண்டறிந்தது.

நீதிமன்ற உத்தரவு

அதையடுத்து, முகமது கம்ரானைக் கடிந்துகொண்ட நீதிமன்ற அமர்வு, ``ஒன்று அவர் வழக்கறிஞராக இருக்க வேண்டும். இல்லையென்றால் பத்திரிகையாளராக இருக்க வேண்டும். ஆனால், ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் இரண்டு வேலைபார்ப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. வழக்கறிஞர் தொழில் ஒரு உன்னதமான தொழில். அவர் தன்னை பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ள முடியாது" என்று கூறியது. அதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம், வழக்கறிஞராக இருந்துகொண்டே பத்திரிகையாளராகவும் பணியாற்றியதற்காக முகமது கம்ரான் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

Ayodhya: "அயோத்தி வழக்கு விசாரணையின்போது தினமும் கடவுளை வேண்டுவேன்..." - நீதிபதி சந்திரசூட்

அயோத்தி என்றதும் பாபர் மசூதி வழக்குதான் நினைவுக்கு வரும் அளவு, நீண்ட காலம் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையிலேயே இருந்தது. மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, தேர்தலைச் சந்திக்கும்போதெல்லாம் அளித்த தேர... மேலும் பார்க்க

``நியோமேக்ஸ் சொத்துகளை இதுவரை முடக்காதது ஏன்?'' - அரசாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

"நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி வழக்கில் இணைக்கவில்லையென்றால் உள்துறைச்செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும்" என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பர... மேலும் பார்க்க

``நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்தான், ஆனால்..." - நீதிபதி சந்திரசூட்

இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் அவர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உத்யோகப்பூர்வ பயணமாக பூடான் சென்ற நீதிபதி ... மேலும் பார்க்க

Chandrachud: 'எனக்கு பின்..!' - CJI பதவிக்கு சந்திரசூட் பரிந்துரைத்த சஞ்சீவ் கண்ணா - யார் இவர்?

"கடந்த இரண்டு ஆண்டுகளாக, என் நாட்டிற்கு சேவை புரிந்தப்பின் வரும் நவம்பர் மாதம் நான் ஓய்வு பெறுகிறேன்.என்னுடைய இந்த இரண்டு ஆண்டு பணிக்காலத்தை நிறைவாகவும், சிறப்பாகவும் செய்துள்ளேன். ஆனாலும், என் மனதில்... மேலும் பார்க்க

Karnataka: "பள்ளிவாசலில் ஜெய் ஸ்ரீராம் என முழங்கினால் மத உணர்வுகள் புண்படுமா?" - நீதிமன்றம் கேள்வி

கர்நாடக மாநிலம் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்தில் இருக்கும் காவல் நிலையம் ஒன்றில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரில், "இரவு 10:30 மணிக்கு மேல் இருவர் பள்... மேலும் பார்க்க