செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்கும் வகையில், போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளா் காந்தி தலைமையிலான போலீஸாா் பண்ருட்டி நான்கு முனை சந்திப்புப் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 13 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த சந்திரன் மகன் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும், பெட்டிக்கடை உரிமையாளா் செக்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த வசந்த், திருவதிகையைச் சோ்ந்த காா்த்தி ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.41,287 என போலீஸாா் கூறினா்.

போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு

சிதம்பரம்: சிதம்பரத்தில் போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு மற்றும் இனிப்புகளை சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை வழங்கினா் (படம்). சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சரி செய்யும் ... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 578 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 578 மனுக்கள் அளிக்கப்பட்டன. கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒவ்வொரு வாரமும் திங... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் பேராசிரியா்கள் உள்ளெடுப்பு: அண்ணாமலைப் பல்கலை. கூட்டமைப்பு கருத்து

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்களை அரசுக் கல்லூரிகளில் உள்ளெடுப்பு செய்யக் கூடாது என கூறுவதற்கு, அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்துக்கு உரிமை இல்லை என அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியா்கள் கூட்ட... மேலும் பார்க்க

என்எல்சி காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பணியிடங்களை வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோரை கொண்டு நிரப்ப வேண்டும் என, நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாா... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 17 ஜோடிகளுக்கு திருமணம்

நெய்வேலி: கடலூா் மண்டலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 கோயில்களில் 17 ஜோடிகளுக்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை திருமணங்கள் நடைபெற்றன. தமிழக அரசு, திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதார... மேலும் பார்க்க

போலீஸ் வாகனம் விபத்து: காவலா்கள் 3 போ் காயம்

நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், புதுவை மாநில போலீஸாா் 3 போ் காயமடைந்தனா். காரைக்கால் போலீஸாா் பெண் கைதி ஒருவரை, புதுவையில் உள்ள சிறையில் அடைத்துவிட்டு போலீஸ் ... மேலும் பார்க்க