செய்திகள் :

``நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்தான், ஆனால்..." - நீதிபதி சந்திரசூட்

post image

இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் அவர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உத்யோகப்பூர்வ பயணமாக பூடான் சென்ற நீதிபதி சந்திரசூட், லியோன்போ சோக்யால் டாகோ ரிக்ஜினை சந்தித்து, அண்டை நாடுகளுக்கிடையே இருதரப்பு நீதித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நீதித்துறை மற்றும் சட்ட ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடுவதற்கு இரு தரப்பு தலைமை நீதிபதிகளும் தலைமை தாங்கினர்.

சந்திரசூட்

அதைத் தொடர்ந்து, பூடானில் உள்ள ஜிக்மே சிங்யே வாங்சுக் சட்டப் பள்ளியின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள், அறங்காவலர்கள் மட்டுமே அரசியல் அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள் என்பது பொது நம்பிக்கை கோட்பாட்டின் சாராம்சம். மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட அரசியல் அதிகாரம், மக்களுக்கு வளங்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும். அந்த விநியோகம் நியாயமானதாகவும்,  சமநிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வது நீதி துறையின் பொறுப்பாகும்.

நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்தான். ஆனால், ஜனநாயக கோட்பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும்,  அவர்களின் பணிகளின் பொறுப்புக்கூறலுடனும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். எங்களின் பொது நம்பிக்கை, நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு மையமாக இருக்கிறது. நீதித்துறை பொது கருத்துக்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதே நேரம், நமது சுதந்திரத்திற்கு உள்ளார்ந்த பொது நம்பிக்கை, நியாயத்தை வழங்குவதாகவே இருக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Ayodhya: "அயோத்தி வழக்கு விசாரணையின்போது தினமும் கடவுளை வேண்டுவேன்..." - நீதிபதி சந்திரசூட்

அயோத்தி என்றதும் பாபர் மசூதி வழக்குதான் நினைவுக்கு வரும் அளவு, நீண்ட காலம் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையிலேயே இருந்தது. மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, தேர்தலைச் சந்திக்கும்போதெல்லாம் அளித்த தேர... மேலும் பார்க்க

``நியோமேக்ஸ் சொத்துகளை இதுவரை முடக்காதது ஏன்?'' - அரசாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

"நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி வழக்கில் இணைக்கவில்லையென்றால் உள்துறைச்செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும்" என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பர... மேலும் பார்க்க

Chandrachud: 'எனக்கு பின்..!' - CJI பதவிக்கு சந்திரசூட் பரிந்துரைத்த சஞ்சீவ் கண்ணா - யார் இவர்?

"கடந்த இரண்டு ஆண்டுகளாக, என் நாட்டிற்கு சேவை புரிந்தப்பின் வரும் நவம்பர் மாதம் நான் ஓய்வு பெறுகிறேன்.என்னுடைய இந்த இரண்டு ஆண்டு பணிக்காலத்தை நிறைவாகவும், சிறப்பாகவும் செய்துள்ளேன். ஆனாலும், என் மனதில்... மேலும் பார்க்க

Karnataka: "பள்ளிவாசலில் ஜெய் ஸ்ரீராம் என முழங்கினால் மத உணர்வுகள் புண்படுமா?" - நீதிமன்றம் கேள்வி

கர்நாடக மாநிலம் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்தில் இருக்கும் காவல் நிலையம் ஒன்றில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரில், "இரவு 10:30 மணிக்கு மேல் இருவர் பள்... மேலும் பார்க்க