செய்திகள் :

தில்லியில் சட்டம் ஒழுங்கை கையாள பாஜகவால் இயலவில்லை: ஆம் ஆத்மி

post image

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாகச் சாடியது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் கூறியது,

மக்களைக் குறிவைத்து தீவிரவாத கும்பல்கள் ஈடுபட்டு வருவதாகவும், தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசலாம் எதுவும் செய்ய இயலவில்லை.

சட்டம் ஒழுங்கை மேம்படுத்தக் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை பாஜக சமர்ப்பிக்க வேண்டும். தில்லியில் சட்டம் ஒழுங்கைக் கையாளும் திறன் பாஜகவிடம் இல்லை என்றால், நாட்டின் எல்லைகளை மட்டும் எவ்வாறு பாதுகாக்க இயலும் என்று கேள்வி எழுப்பினார்.

ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், ஜம்மு காஷ்மீரில் நிலைமையைக் கையாள மத்திய அரசால் முடியவில்லை.

பாஜக தலைமையிலான மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்தது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள், தில்லியில் கூட பாஜகவால் சட்டம் ஒழுங்கை கையாள முடியவில்லை.

மேலும், தில்லியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை எழுப்பிய அவர், நகரத்தில் உள்ள வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலிலிருந்து நிவாரணம் வழங்க மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பிரதமர் கல்வித்தகுதி வழக்கு: கேஜரிவாலின் மனு தள்ளுபடி!

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான அவதூறு வழக்கில் கேஜரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதமரின் கல்வித் தகுதி குறிதது ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர... மேலும் பார்க்க

பாபா சித்திக் கொலை வழக்கு: 4 பேருக்கு அக். 25வரை காவல் நீட்டிப்பு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதிவரை காவல் நீட்டித்து மும்பை உயர்நீதிமன்றம் இன்று (அக். 21) உத்தரவிட்டது. மேலும் பார்க்க

நவ.1 முதல் ஏர் இந்தியா விமானங்களில் பயங்கரவாதத் தாக்குதல்! முன்கூட்டியே மிரட்டல்

ஏர் இந்தியா விமானங்களில் நவ. 1 முதல் 19 வரையிலான காலக்கட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.என்ன சொல... மேலும் பார்க்க

உ.பி., இடைத்தேர்தலில் சமாஜவாதி மிகப்பெரிய வெற்றி பெறும்: டிம்பிள் யாதவ்

உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி மாபெரும் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் தெரிவித்தார். மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: பாஜகவுடன் உத்தவ் தாக்கரே (சிவசேனை) பேச்சுவார்த்தை?

இந்திய அரசமைப்பின் எதிரிகளை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனை(உத்தவ் அணி) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! - ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜெர... மேலும் பார்க்க