செய்திகள் :

போலி வெடிகுண்டு மிரட்டல்கள்... குற்றவாளிகள் விமானங்களில் பறக்கத் தடையா?

post image

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளை விமானங்களில் பறப்பதற்கானத் தடை பட்டியலில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 100 விமானங்களுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால், விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தில்லியில் பேசிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புக்கு எதிரான சட்டவிரோத செயல்களை ஒடுக்குதல் சட்டம், 1982 -ன் கீழ் விமான பாதுகாப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளுக்கு விமானங்களில் பறப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க: ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

மேலும், “விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் உள்துறை அமைச்சகத்துடன் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் நடக்கும்போது அதனை சரியான முறையில் கையாள வேண்டும், இதற்கென சர்வதேச நெறிமுறைகள் உள்ளன” என்றார்.

தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், “கடந்த வாரம் மட்டும் 8 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அச்சுறுத்தலும் தனித்தனியே கண்காணிக்கப்பட்டது. இந்தப் பிரச்னைகளை சிறப்பாக கையாண்டுள்ளோம். அவை போலி வெடிகுண்டு மிரட்டல்களாக இருந்த போதிலும் பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்யவில்லை.

பயணிகளின் உயிர், பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். மேலும், சரியான நடைமுறைகளைப் பின்பற்றுதலும் மிக முக்கியமானது. தற்போது விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஒரு வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிரதமர் கல்வித்தகுதி வழக்கு: கேஜரிவாலின் மனு தள்ளுபடி!

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான அவதூறு வழக்கில் கேஜரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதமரின் கல்வித் தகுதி குறிதது ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர... மேலும் பார்க்க

பாபா சித்திக் கொலை வழக்கு: 4 பேருக்கு அக். 25வரை காவல் நீட்டிப்பு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதிவரை காவல் நீட்டித்து மும்பை உயர்நீதிமன்றம் இன்று (அக். 21) உத்தரவிட்டது. மேலும் பார்க்க

நவ.1 முதல் ஏர் இந்தியா விமானங்களில் பயங்கரவாதத் தாக்குதல்! முன்கூட்டியே மிரட்டல்

ஏர் இந்தியா விமானங்களில் நவ. 1 முதல் 19 வரையிலான காலக்கட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.என்ன சொல... மேலும் பார்க்க

உ.பி., இடைத்தேர்தலில் சமாஜவாதி மிகப்பெரிய வெற்றி பெறும்: டிம்பிள் யாதவ்

உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி மாபெரும் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் தெரிவித்தார். மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: பாஜகவுடன் உத்தவ் தாக்கரே (சிவசேனை) பேச்சுவார்த்தை?

இந்திய அரசமைப்பின் எதிரிகளை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனை(உத்தவ் அணி) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! - ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜெர... மேலும் பார்க்க