செய்திகள் :

Karnataka: "பள்ளிவாசலில் ஜெய் ஸ்ரீராம் என முழங்கினால் மத உணர்வுகள் புண்படுமா?" - நீதிமன்றம் கேள்வி

post image

கர்நாடக மாநிலம் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்தில் இருக்கும் காவல் நிலையம் ஒன்றில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்தப் புகாரில், "இரவு 10:30 மணிக்கு மேல் இருவர் பள்ளிவாசல் உள்ளே நுழைந்து ஜெய் ஶ்ரீ ராம் எனக் கூச்சலிட்டும், அச்சுறுத்தும் வகையில் மிரட்டிச் சென்றனர். இதனால், பள்ளிவாசலில் தங்கியிருந்தவர்களுக்கும், அந்தப் பகுதியில் வசித்தவர்களுக்கும் பதற்றமான சூழல் உருவானது. தற்போதுவரை பள்ளிவாசல் இருக்கும் பகுதிகளில் மதவேற்றுமை இன்றி இரண்டு சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, தவறான நோக்கத்துடன் செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரியிருந்தனர்.

நீதிபதி நாகபிரசன்னா

அதைத் தொடர்ந்து இந்தப் புகாரை விசாரித்த காவல்துறை, அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் குமார், சச்சன் குமார் என்ற இரு இளைஞர்களைக் கைது செய்தது. அவர்கள் மீது, இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 447 (குற்றவியல் அத்துமீறல்), 505 (பொது அமைதியைக் கெடுக்க வழிவகுக்கும் அறிக்கைகள்), 506 (குற்றவியல் மிரட்டல்), 34, 295 ஏ (மத உணர்வுகளைச் சீர்குலைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நீதிபதி நாக பிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, "பிரிவு 295ஏ என்பது தீங்கிழைக்கும் நோக்கில் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் வேண்டுமென்றே அவமதிப்பதற்காகப் பதியப்படுவது. ’ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவது எப்படி மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்று புரியவில்லை. அந்த பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதாகப் புகார் தாரரே தெரிவித்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் மோதலை ஏற்படுத்தும் என்று கூறுவதில் உண்மை இருக்க முடியாது.

கர்நாடக உயர் நீதிமன்றம்

மேலும், 295ஏ பிரிவின் கீழ் எந்தவொரு செயலும் குற்றமாக மாறாது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அமைதியைக் கொண்டுவருவதிலோ அல்லது பொது ஒழுங்கைச் சீர்குலைப்பதிலோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத செயல்கள் 295A பிரிவின் கீழ் குற்றத்திற்கு வழிவகுக்காது. குற்றத்தின் மூலப்பொருளைக் கண்டறியாமல், மனுதாரர்களுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது துஷ்பிரயோகம் மற்றும் தவறான நீதிக்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Ayodhya: "அயோத்தி வழக்கு விசாரணையின்போது தினமும் கடவுளை வேண்டுவேன்..." - நீதிபதி சந்திரசூட்

அயோத்தி என்றதும் பாபர் மசூதி வழக்குதான் நினைவுக்கு வரும் அளவு, நீண்ட காலம் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையிலேயே இருந்தது. மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, தேர்தலைச் சந்திக்கும்போதெல்லாம் அளித்த தேர... மேலும் பார்க்க

``நியோமேக்ஸ் சொத்துகளை இதுவரை முடக்காதது ஏன்?'' - அரசாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

"நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி வழக்கில் இணைக்கவில்லையென்றால் உள்துறைச்செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும்" என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பர... மேலும் பார்க்க

``நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்தான், ஆனால்..." - நீதிபதி சந்திரசூட்

இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் அவர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உத்யோகப்பூர்வ பயணமாக பூடான் சென்ற நீதிபதி ... மேலும் பார்க்க

Chandrachud: 'எனக்கு பின்..!' - CJI பதவிக்கு சந்திரசூட் பரிந்துரைத்த சஞ்சீவ் கண்ணா - யார் இவர்?

"கடந்த இரண்டு ஆண்டுகளாக, என் நாட்டிற்கு சேவை புரிந்தப்பின் வரும் நவம்பர் மாதம் நான் ஓய்வு பெறுகிறேன்.என்னுடைய இந்த இரண்டு ஆண்டு பணிக்காலத்தை நிறைவாகவும், சிறப்பாகவும் செய்துள்ளேன். ஆனாலும், என் மனதில்... மேலும் பார்க்க