செய்திகள் :

BSNL: இனி நோ `கனெக்டிங் இந்தியா', ஒன்லி `கனெக்டிங் பாரத்'; காவி மயமாக்கப்பட்ட பி.எஸ்.என்.எல் லோகோ!

post image

மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் (Prasar Bharati), தூர்தர்ஷன் இந்தி செய்தி சேனலின் லோகோ நிறம், கடந்த ஏப்ரலில் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் இதற்கு அரசியல் எதிர்ப்புகளும் வந்தன. தூர்தர்ஷன் தமிழ் சேனலின் லோகோவும் தற்போது காவி நிறத்தில்தான் இருக்கிறது.

பி.எஸ்.என்.எல் பழைய லோகோ

இந்த நிலையில், மக்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பைப் பெற்றுவரும் மத்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் (BSNL)-ன் லோகோவும் காவி மயமாக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பி.எஸ்.என்.எல்லின் புதிய காவி நிற லோகோவை அறிமுகப்படுத்தினார்.

ஏற்கெனவே இருந்த பழைய லோகோவானது, சாம்பல் நிற வட்டத்தைச் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இரண்டு அம்புக்குறிகள் சுற்றிவருவது போல இருக்கும். மேலும், பி.எஸ்.என்.எல் என்ற வார்த்தைக்கு கீழே `கனெக்டிங் இந்தியா' என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும்.

பி.எஸ்.என்.எல்

தற்போது, ஏற்கெனவே இருந்த சாம்பல் நிற வட்டத்தைக் காவி நிறமாக்கி, அந்த வட்டத்துக்குள் இந்தியாவின் வரைபடத்தை வைத்து, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் இரண்டு அம்புகுறிகள் அந்த காவி வட்டத்தைச் சுற்றி வருவது போல புதிய லோகோ மாற்றப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கனெக்டிங் இந்தியா என்றிருந்த வாசகத்தை நீக்கி, காவி நிறத்தில் `கனெக்டிங் பாரத்' என புதிய வாசகம் வைக்கப்பட்டிருக்கிறது.

பி.எஸ்.என்.எல்

அது கூடவே, காவி, நீலம் மற்றும் பச்சை நிறங்கள் முறையே `Securely, Affordably, Reliably' என்ற மூன்று வார்த்தைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவற்றோடு, பி.எஸ்.என்.எல்லின் ஏழு புதிய சேவைகளை ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருப்பத்தூர்: சரிந்துவிழும் நிலையில் மின்கம்பம்... அச்சத்தில் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருப்பத்தூரில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலையின்நடுவே வரிசையாக மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில், பேருந்து நிலையத்தின் முன் அமைக்கப்பட்ட மின் விளக்கு கம்பங்களில் ஒன்றுதற்போது சேதமடைந்தது, பொதுமக்... மேலும் பார்க்க

PMK: ``தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே'' - அன்புமணி

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி வரவிருக்கிறது. லட்சக் கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பவுள்ளனர். இதற்கான அரசு போக்குவரத்து முன்பதிவுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்... மேலும் பார்க்க

ஆம்பூர் மூதாட்டி பெயரில் ரூ.2.39 கோடிக்கு GST மோசடி; கேரளாவில் பரிவர்த்தனை - நடந்தது என்ன?!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரம், காமராஜர் 3-வது தெருவில் வசிக்கிறார் மூதாட்டி ராணி பாபு. அதே பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலைச் செய்து வரும் ராணி பாபு பெயரில்... மேலும் பார்க்க

`எல்.முருகனின் விஷமத்தைவிட அவர் கருத்து ஆபத்தானது’ - ஆதரவு தெரிவித்த சீமானை விசிக தாக்கும் பின்னணி?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஒருபக்கம் விமர்சிக்க, மறு பக்கம் முருகனுக்கு எதிராக கடும் எதிர்வினையாற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா... மேலும் பார்க்க

அட்டைப்படம்

அட்டைப்படம் - விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க