செய்திகள் :

டானா புயல்: 28 ரயில்கள் ரத்து!

post image

டானா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(அக். 23), நாளை மறுநாள்(அக். 24) மற்றும் அக். 26 ஆம் தேதி இயக்கப்பட இருந்த ரயில் சேவைகளை கிழக்கு கடற்கரை ரயில்வே ரத்து செய்துள்ளது.

வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸா மற்றும் மேற்கு வங்க கடற்கரை இடையே புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு நடுவே தீவிரப் புயலாக வலுப்பெற்று அக். 25 அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

28 ரயில்கள் ரத்து

புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களும், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காரக்பூர் - விழுப்புரம் அதிவிரைவு ரயில், ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், ஹௌரா - திருச்சி அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 28 ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது

தீபாவளி: நெல்லை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெரிசலை குறைப்பதற்காக அக். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்அக். 29-ல் சென்னை சென்ட்ரலில் இரு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 25 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கார... மேலும் பார்க்க

ஏடிஎம் கொள்ளை: வடமாநில கும்பலை பிடித்த காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு!

ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக வடமாநில கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 22) நாமக்கல் மாவட்டத்திற... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலையத்தில் பரபரப்பு! தீப்பிடித்து எரிந்த வேன்!

பெட்ரோல் நிலையத்திற்கு எரிவாயு நிரப்புவதற்காக சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.கோவை உக்கடம் அருகே பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் எரிவாயு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அ... மேலும் பார்க்க

புது வசந்தம் பட பாணியில் புதிய தொடர்!

புது வசந்தம் பட பாணியில் உருவாகியுள்ள புதிய தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.வித்தியாசமான கதையமைப்பு, விறுவிறுப்பான கதைக்களம் என சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில... மேலும் பார்க்க

ரூ. 499-க்கு 15 மளிகைப் பொருள்கள்: அமுதம் அங்காடிகளில் இன்று முதல் விற்பனை!

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.499-க்கு 15 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு அமுதம் அங்காடிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் குறைந்த விலையில் மளிகைப் பொருள... மேலும் பார்க்க