செய்திகள் :

Sanju Samson: ``ரோஹித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்...'' - சஞ்சு சாம்சன் கூறியதென்ன?

post image
17 வருடங்கள் கழித்து ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சாம்சன், “ஃபைனலில் விளையாட தயாராக இருக்குமாறு என்னிடம் சொன்னார்கள். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியில் விளையாட வைக்காததற்காக டாஸ் முடிந்த பிறகு வந்து ரோஹித் பாய் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

மேலும் என்னை அழைத்துச் சென்று அந்த முடிவை பற்றி புரிய வைத்தார். அப்போது முதலில் நாம் போட்டியை வெல்வோம். பின்னர் இது பற்றி பேசலாம். நீங்கள் போட்டியில் கவனம் செலுத்துங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஒரு நிமிடம் கழித்து மீண்டும் என்னிடம் வந்த ரோஹித் பாய் மனதிற்குள் நீங்கள் எனக்கு சாபம் விடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது போல் நான் உணர்கிறேன் என்று சொன்னார்.

அவரிடம் ஒரு வீரராக நான் விளையாடவே விரும்புகிறேன் என்று சொன்னேன். ஏனெனில் சிறு வயது முதலே அதற்காக நான் காத்திருந்தேன். ரோஹித் சர்மா போன்ற ஒருவர் தலைமையில் விளையாடாதது வாழ்நாள் முழுவதும் எனக்கு வருத்தமாகவே இருக்கும். இருப்பினும் அணிக்காக அவர் அந்த முடிவை எடுத்தார்.

சஞ்சு சாம்சன்

ஆனால் அப்போது மற்ற வீரர்களிடம் கவனத்தை செலுத்தாமல் அவர் அந்த முடிவு பற்றி என்னிடம் அதை விளக்குவதில் கவனம் செலுத்தினார். அந்த தருணத்தில் என் இதயத்தில் ஒரு இடத்தை வென்று விட்டார்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

MS Dhoni: `தோனி பெயர் வந்தாலே ஸ்கிப் பண்ணிருவோம்' - சஞ்சு சாம்சன் பகிர்ந்த சுவாரஸ்யம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடைசியாக சர்வதேச கிரிக்கெட் ஆடி ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், சர்வத... மேலும் பார்க்க

Gambhir - Rohit: கம்பீர் - ரோஹித் காம்போவில் இந்திய அணி அடுத்தடுத்து `அப்செட்’... மீளும் வழி என்ன?!

ஒரு சாம்பியன் அணியும், முன்னாள் சாம்பியனும் இணையும்போது அந்த அணி அடுத்தடுத்து புதிய உச்சங்களை நோக்கி முன்னேறும் என்றுதான் எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால், இந்திய அணிக்கோ அதற்கு நேரெதிராக நடந்துகொண்ட... மேலும் பார்க்க

IND Vs NZ : ரச்சினின் வெற்றிக்கு உதவிய 'சென்னை' பயிற்சி - ஆட்டநாயகனான CSK வீரர் பேசியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 6 டக் அவுட்டுடன் 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அ... மேலும் பார்க்க

IND Vs NZ : 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.... மேலும் பார்க்க

Dhoni : வரும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? - சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

வருகிற ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவாரா? என்பது பற்றி அதன் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார்.2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிற... மேலும் பார்க்க

Ind Vs Nz : ``46 ஆல் அவுட்டுக்கு நானே பொறுப்பு!'' - என்ன சொல்கிறார் கேப்டன் ரோஹித்?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூர் மைதானங்களில் இந்தியாவின் குறைந்தபட்ச... மேலும் பார்க்க