செய்திகள் :

IND Vs NZ : ரச்சினின் வெற்றிக்கு உதவிய 'சென்னை' பயிற்சி - ஆட்டநாயகனான CSK வீரர் பேசியதென்ன?

post image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 6 டக் அவுட்டுடன் 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.

தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 402 ரன்கள் விளாசியது. சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவிந்திரா 134 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி, லீடிங் 356 என்ற இமாலய இலக்குடன் போராட வேண்டியிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில், சப்ராஸ் கான் 150 ரன்கள், ரிஷப் பண்ட் 99 ரன்கள் விளாச 462 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து. 3 விக்கெட் மட்டுமே இழந்து போட்டியைக் கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் 39 ரன்கள் எடுத்திருந்த ரச்சின் ரவிந்திரா ஆட்டமிழக்காமல் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

Rachin Ravindra - Man of the Match

இந்த போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். போட்டிக்கு பிறகான பேட்டியில் ரச்சின், "இங்கே பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருந்தது. என்னுடைய ஃபார்மும் தயாரிப்புகளும் சரியாக இருந்தது. என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு எனக்கு இருக்கும் வரை, எனக்கு என் திட்டம் என்னவென்று தெரியும். அனைத்தும் சிறப்பாக செல்லும்” என்றார்.

இந்த போட்டியில் கையாண்ட பேட்டிங் ஸ்டைல் குறித்து, "முன் பின் நகர்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. அட்டாக் செய்ய நினைக்கவில்லை, அதை விட நிலையாக நிற்க வேண்டியது அவசியமாக இருந்தது. அடித்து விளையாட நினைக்கவில்லை, சரியான பொசிஷனில் இருந்தேன். அதனாலேயே என்னால் ஸ்கோர் செய்ய முடிந்தது.

நான் நகர்ந்த விதம் என்னை பல இடங்களில் ரன் அடிக்க வைத்தது. எப்போதும் பௌண்டரி பெற வேண்டும் என்பதில்லை. அணியில் பேசியபடி, ஸ்ட்ரைக் ரொடேட் செய்தோம். நாங்கள் நம்பியபடி, லெஃப்ட்-ரைட் காம்பினேஷன் அவர்களை சோர்வாக்கியிருக்கும் என நினைக்கிறேன்" என்றார்.

போட்டிகளுக்கு முன்பு சென்னையில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற சி.எஸ்.கே வீரர் ரச்சின், "தொடர்ந்து 6 போட்டிகள் வரும்போது நாம் எக்ஸ்ட்ராவாக எதாவது செய்ய வேண்டும். வீட்டுக்குள்ளோ அல்லது வெளியிலோ பயிற்சி எடுக்க வேண்டும். அது எல்லாமே இன்று பலனளித்தது.

சென்னையில் கருமண், செம்மண் என வித்தியாசமான பிட்ச்களில் பயிற்சி எடுத்தேன். பல பௌலர்களுடன் நெட்ஸில் பயிற்சி செய்து என் னமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் எனப் பார்த்தேன். எல்லா நாட்களும் பயிற்சி செய்தேன். அது மிக முக்கியமான அனுபவம்." என்று சென்னைக்கு நன்றி கடனுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

IND Vs NZ : 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.... மேலும் பார்க்க

Dhoni : வரும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? - சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

வருகிற ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவாரா? என்பது பற்றி அதன் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார்.2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிற... மேலும் பார்க்க

Ind Vs Nz : ``46 ஆல் அவுட்டுக்கு நானே பொறுப்பு!'' - என்ன சொல்கிறார் கேப்டன் ரோஹித்?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூர் மைதானங்களில் இந்தியாவின் குறைந்தபட்ச... மேலும் பார்க்க

INDvNZ: `முடிச்சுவிட்டீங்க போங்க' - 46 ரன்களுக்கு ஆல் அவுட்; இந்தியா சொதப்பியது எங்கே?

பெங்களூருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. கடைசியாக 2020-21 பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்... மேலும் பார்க்க

INDvNZ : 0,0,0,0 - 4 வீர்ரகள் டக்; சுதாரிக்காத ரோஹித்; கோலி - பெங்களூருவில் தடுமாறும் இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று மழையினால் ஆட்டம் முழுமையாக தடைப்பட்டிருந்தது. இன்றுதான் போட்டி தொடங்கியது. முதல் செ... மேலும் பார்க்க

IPL 2025 : தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம்... BCCI கொடுத்த புதிய அப்டேட்!

ஐபிஎல் 2025-ல் வீரர்களுக்கான சம்பள தொகை அடுக்குகளில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது பிசிசிஐ. இதன் மூலம் ரிட்டன்ஷன் செய்யப்படும் வீரர்களுக்கு அவர்கள் விருப்பப்படி 75 கோடியை பிரித்துக்கொடுக்க... மேலும் பார்க்க