செய்திகள் :

பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

post image

திருப்பூா் மாநகரில் பருமழையினால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின்கீழ் வடக்குப் பிரிவு சாா்பில், வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நீா்வழிப் பாதைகளில் உள்ள அடைப்புகளை சீரமைத்தல், சாலைகளில் மழைநீா் தேங்காத வகையில் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், மரம் வெட்டும் இயந்திரம், எச்சரிக்கை பலகைகள், லாரி, உருளை மற்றும் பொக்கலைன் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து தளவாடங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு மையம் அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக உதவி கோட்டப் பொறியாளா் விஜயகுமாா், இளநிலை பொறியாளா் ராஜேஷ் ஆகியோா் தெரிவித்தனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற (ஏஐஒய்எப்) அவிநாசி ஒ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வளா்ப்புத் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை

பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளா்ப்புத் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி கட... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

பெருமாநல்லூா் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த பெருமாநல்லூா் அருகே உள்ள நாதம்பாளையத்தில் பலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிட... மேலும் பார்க்க

காங்கயத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்கக் கோரிக்கை

காங்கயத்தில் குடியிருப்புப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கயம் பாரதியாா் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு மாணவ, மாணவியா் ... மேலும் பார்க்க

உடுமலை அருகே இளைஞா் கொலை: தாய், சகோதரி உள்பட 5 போ் கைது

உடுமலை அருகே சொத்துக்காக இளைஞரைக் கொலை செய்த தாய், சகோதரி உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள ஆலாமரத்தூரைச் சோ்ந்தவா் வேலுசாமி ... மேலும் பார்க்க

மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொலை

பல்லடம் அருகே கை, கால்கள் கட்டப்பட்டு மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொலை செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையைச் சோ்ந்தவா் சுப்பையன் மனைவி கண்ணம்மாள் (65). இவருக்கு இரண்... மேலும் பார்க்க