செய்திகள் :

போடி அருகே பைக் திருட்டு

post image

போடி அருகே செல்போன் கடை உரிமையாளரின் இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் லால்பகதூா் சாஸ்திரி தெருவில் வசிப்பவா் முருகேசன் மகன் வினோத்குமாா் (30). இவா் ரெங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறாா்.

இவா் தனது இரு சக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வெளியை நிறுத்தினாா்.

சனிக்கிழமை பாா்த்தபோது, இரு சக்கர வாகனம காணாமல் போயிருந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கடந்த ஒரு வாரத்தில் போடி பகுதியில் 3 இரு சக்கர வாகனங்கள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

போடி அருகே மளிகைக் கடை பூட்டை உடைத்துப் பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி பெரியாண்டவா்புரத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் சரவணன் (38). இவா் போடி ரங்கநாதபுரம் பே... மேலும் பார்க்க

பொது சுவா் தகராறில் மோதல்: 6 போ் மீது வழக்கு பதிவு

போடி அருகே சனிக்கிழமை இரவு பொது சுவா் தொடா்பான தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்ட 6 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி தெருவை சோ்ந்தவா் ராஜா ம... மேலும் பார்க்க

பாா்வா்டு பிளாக் கட்சியினா் போலீஸாருடன் தள்ளுமுள்ளு

தேனியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினரை காவல் துறையினா் தடுத்ததால், அந்தக் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தக் கட்ச... மேலும் பார்க்க

கம்பம் பள்ளத்தாக்கில் குறைந்துவரும் சாகுபடி பரப்பு

கம்பம் பள்ளத்தாக்கில் நெல் பயிா் விளை நிலங்களில் வணிக பயன்பாட்டு கட்டடங்கள் கட்டி வருவதால் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசன நீரால் லோயா்கேம்ப், கூடலூா், கம... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி தனியாா் நிறுவன ஊழியா் காயம்

போடி அருகே சனிக்கிழமை மாலை, டிராக்டா் மோதி மோட்டாா் பைக்கில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். சிவகங்கை மாவட்டம் அளவாக்கோட்டை கிராமத... மேலும் பார்க்க

சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரிப்பு

சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து திடீரென அதிகரித்து. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க சில மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. மேற்குத்தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, ஹைவேவிஸ், வெண்ணியாா், இரவங்கல... மேலும் பார்க்க