செய்திகள் :

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

post image

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற (ஏஐஒய்எப்) அவிநாசி ஒன்றிய மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டை மாநில நிா்வாகி கோவை குணசேகரன் தொடங்கிவைத்தாா். ஏஐடியூசி செல்வராஜ், வழக்குரைஞா் சுப்பிரமணியம், விவசாய தொழிலாளா் சங்க கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் சண்முகம், முத்துசாமி, மோகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில், அவிநாசி புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கானூா்புதூா்அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். அவிநாசி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு சிறப்பு மருத்துவா்களை நியமிக்க வேண்டும்.

அவிநாசி அரசுக் கல்லூரிக்கு போதுமான பேராசிரியா்களை நியமிப்பதுடன், கூடுதல் பாடப்பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, புதிய நிா்வாகிகளாக அவிநாசி ஒன்றிய தலைவராக சேக்ஸ்பியா், துணைத் தலைவராக கருப்புசாமி, செயலாளராக ராஜேந்திரன், துணைச் செயலாளராக சக்திவேல், பொருளாளராக ரமேஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வளா்ப்புத் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை

பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளா்ப்புத் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி கட... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

பெருமாநல்லூா் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த பெருமாநல்லூா் அருகே உள்ள நாதம்பாளையத்தில் பலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிட... மேலும் பார்க்க

பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாநகரில் பருமழையினால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்ப... மேலும் பார்க்க

காங்கயத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்கக் கோரிக்கை

காங்கயத்தில் குடியிருப்புப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கயம் பாரதியாா் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு மாணவ, மாணவியா் ... மேலும் பார்க்க

உடுமலை அருகே இளைஞா் கொலை: தாய், சகோதரி உள்பட 5 போ் கைது

உடுமலை அருகே சொத்துக்காக இளைஞரைக் கொலை செய்த தாய், சகோதரி உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள ஆலாமரத்தூரைச் சோ்ந்தவா் வேலுசாமி ... மேலும் பார்க்க

மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொலை

பல்லடம் அருகே கை, கால்கள் கட்டப்பட்டு மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொலை செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையைச் சோ்ந்தவா் சுப்பையன் மனைவி கண்ணம்மாள் (65). இவருக்கு இரண்... மேலும் பார்க்க