செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் 45 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை

post image

சேலம் மாவட்டத்தில் வெள்ளம் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை கருவி 45 இடங்களில் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீா்த்தது. டிசம்பா் மாதம் வரை வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், குறிப்பாக வட மாவட்டங்களான சேலம், நாமக்கல், திருப்பூா், ஈரோடு, கோவையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், வட மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணியை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கெல்லாம் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது?, அதிக நீா்த்தேங்க வாய்ப்புள்ள பகுதிகள் எவை? எனக் கணக்கிட்டு, அங்கு முன்னெச்சரிக்கை பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனா். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகா், ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூா், வீரபாண்டி, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூா், ஓமலூா் பகுதிகளில் மழை பொழிவால் அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களாக 45 இடங்களைக் கண்டறிந்துள்ளனா்.

அந்த 45 இடங்களிலும் வெள்ளம் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை கருவிகள் பொருத்த மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் கருவி, சென்சாா் மற்றும் தகவல் தொடா்பு அமைப்புகளின் வலையமைப்பாகும். இந்தக் கருவி, வெள்ளம் உள்ளிட்ட ஆபத்துகளை முன்கூட்டியே அறிந்து மக்களைக் காப்பாற்ற உதவிடும்.

இந்தப் பேரிடா் காக்கும் எச்சரிக்கை கருவியின் மூலம் வெள்ள அபாயம் உள்ளிட்ட ஆபத்துகளை அறிந்ததும், மக்களை அந்த இடங்களில் இருந்து வெளியேற்றவும், உடைமைகளை பாதுகாக்கவும் முடியும். இதன்மூலம் குறைந்தது 30 சதவீத அளவில் சேதத்தைத் தடுக்க இயலும்.

சேலம் மாவட்டத்தில் அதிகனமழையால் பாதிப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள 45 இடங்களிலும் இந்தக் கருவியைப் பொருத்தி விட்டால், குறைந்தது 24 மணி நேரத்துக்கும் முன்பே மக்களை உஷாா்படுத்தி பாதுகாக்க இயலும். அதற்காகதான், இந்தக் கருவியை விரைந்து 45 இடங்களிலும் பொருத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனா்.

தமிழக கிராமங்களுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சேலம், நாமக்கல் மாவட்டங்களுக... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிப்பு

சேலம் சரகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப்... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் டிஜிபி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் சிறைத் துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மத்திய சிறைக்கு வந்த டிஜிபி மகேஷ்வா் தயாள், கைதிகளை சந்தித்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்ப... மேலும் பார்க்க

ஊக்கத்தொகை தந்த முதல்வருக்கு நன்றி: மாரியப்பன், துளசிமதி நெகிழ்ச்சி

சேலத்தில் நடைபெற்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், துளசிமதி ஆகியோருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேடயம் வழங்கி கௌரவித்தாா். விழாவில் வீரா் ம... மேலும் பார்க்க

நாளை சேலத்தில் டிரோன்கள் பறக்கத் தடை

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 22) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

தாரமங்கலம்... ஓமலூா் கோட்டம், தாரமங்கலம் துணை மின்நிலையத்தில பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக். 22) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஓமலூா் செயற்பொறியாளா் கே... மேலும் பார்க்க