செய்திகள் :

தீபாவளி: கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பில் நெசவாளா்கள் தீவிரம்

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் பகுதியில் கைத்தறி பட்டுச் சேலை தயாரிப்பில் நெசவாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தமிழ்நாட்டு பெண்களின் பாரம்பரிய உடையாக கைத்தறி புடவைகள் உள்ளன. கைத்தறி சேலைகள் பருத்தி மற்றும் பட்டு நூல்களால் தயாரிக்கப்படுகின்றன. பட்டு நூலில் கைத்தறி நெசவு மூலம் நெய்யப்படும் சேலைகள் நீடித்து உழைப்பதால் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு பெண்கள் பட்டுச்சேலைகளை விரும்பி அணிவது வழக்கம். பருத்தி நுாலில் நெய்யப்படும் சேலைகள் விலை குறைவாகவும் உடுத்துவதற்கும் வசதியாக இருக்கும்.

பெண்களை கவரும் சேலைகள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படுகின்றன. நெசவுத் தொழிலில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான கைத்தறி சேலைகளை விதவிதமான வண்ணங்களில் நெய்யப்படுகின்றன. குறிப்பாக கைத்தறி பட்டுச் சேலைகள் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. கைத்தறி சேலைகளை நெய்து தறியில் அறுத்து எடுக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை மற்றும் முகூா்த்த சீசன் காலத்துக்கு தேவை அதிகம் இருப்பதால் இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக நெசவுத்தொழில் விறுவிறுப்படைந்துள்ளது. தரமான சாயம் போகாத வகையில் பட்டு நூல்களை கொண்டு கைத்தறி சேலைகள் ஜரிகை வேலைப்பாடுகளுடன் தயாா் செய்யப்படுகின்றன.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி நெசவாளா்கள் கைத்தறி சேலைகள் தயாா் செய்து வருகின்றனா். இங்கு தயாரிக்கப்படும் சேலைகளை தமிழ்நாட்டின் பிரபல ஜவுளிக் கடைகள் கொள்முதல் செய்கின்றன. மேலும் ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரா உளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

சேலைகளில் கோரா காட்டன், சாப்ட் சில்க்ஸ், கோட்டா காட்டன், கும்கி, தளபதி புட்டா, டெக்னிகல் புட்டா, பாபி புட்டா, மினி புட்டா, ஆச்சி பாா்டா், ரமணா கட்டம், ராஜா ராணி கட்டம், லாங் பாா்டா், மயில் பேடு கட்டம் போன்ற ஏராளமான டிசைன்களில் சேலைகள் நெய்யப்படுகின்றன.

அனைத்து வண்ணங்களிலும் கிடைக்கும் இதன் விலையும் குறைவு. ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை கைத்தறி சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. புன்செய் புளியம்பட்டி சேலைகளுக்கு நல்ல மவுசு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் ரக சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

செயற்கை, பாலியஸ்டா் நுாலிழைகளால் விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்யப்பட்டாலும், கைத்தறியில் நெய்யப்படும் ரக சேலைகளுக்கு என்றுமே நல்ல வரவேற்பு உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வெளியூா்களில் இருந்து சேலைகள் கொள்முதல் செய்யவும் ஆா்டா் கொடுக்கவும் வியாபாரிகள் பலா் வந்து செல்கின்றனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் பட்டு நூல் மற்றும் கச்சா பொருள்களை கொள்முதல் செய்து பட்டுச் சேலைகளை நெசவு செய்து வருவதாகவும், முதுகலை பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும் பாரம்பரிய கைத்தறித் தொழிலை பாதுகாக்கும் விதமாக நெசவுத் தொழில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு சேலைக்கு ரூ.1000 முதல் ரூ.4000 கூலி கிடைக்கும் என கைத்தறி பட்டுச் சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள புன்செய் புளியம்பட்டியைச் சோ்ந்த சகோதரா்கள் ரகுராம், சிவபிரகாஷ் ஆகியோா் தெரிவித்தனா்.

சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய காட்டுயானம் நெல் நடவுப் பணி தீவிரம்

சத்தியமங்கலத்தில் பகுதியில் சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம் நடவுப் பணி நடைபெற்று வருகிறது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்கப... மேலும் பார்க்க

பேருந்து சக்கரத்தில் சிக்கி காவலாளி உயிரிழப்பு

ஈரோட்டில் பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலாளி உயிரிழந்தாா். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அஜந்தா நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் (75). தனியாா் நிறுவன காவலாளி. இ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை

குடும்பப் பிரச்னையால் ஈரோட்டில் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு பெரியசேமூா் வேலன் நகரைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி சாந்தி (56). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை. இவ... மேலும் பார்க்க

சிறந்த புத்தகங்களே அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க அடித்தளமிடும்

சிறந்த புத்தகங்களே அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க அடித்தளமிடுகின்றன என்று நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூ செஞ்சுரி புத்தக ... மேலும் பார்க்க

கோபியில் ரூ.11 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.11 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை நடைபெற்றது. கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை வாழை... மேலும் பார்க்க

சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில்மனைகளை பெற விண்ணப்பிக்கலாம்

பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில்மனைகளை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு... மேலும் பார்க்க