செய்திகள் :

சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய காட்டுயானம் நெல் நடவுப் பணி தீவிரம்

post image

சத்தியமங்கலத்தில் பகுதியில் சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம் நடவுப் பணி நடைபெற்று வருகிறது.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்கப்பட்டதையொட்டி, சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் பாரம்பரிய நெல் ரகம் மற்றும் 120 நாள் சாதாரண ரகமான பொன்னி, ஐஆா் 20 போன்ற நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இதில் பாரம்பரிய நெல் ரகத்தை பாதுகாக்கும் நோக்கில் சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய ரகமான யானைகொம்பன் நெல் சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் ஆனைகொம்பு ஸ்ரீ ராம் என்ற விவசாயி, இந்த பாரம்பரிய நெல் ரகத்தை பயிட்டுள்ளாா். குறைந்தளவு நீா் பாசனம் இருந்தால்போதும், சாதாரண ரக நெல் சாகுபடி 120 நாள் என்றால் பாரம்பரிய பயிரான காட்டுயானம் 160 நாள் வரை வளரக் கூடியது.

ஏக்கருக்கு 5 கிலோ விதை நெல் இருந்தால் மட்டும் போதும். ஆளுயர அளவு நெல்பயிா் வளரக்கூடியதால் யானை மறைக்கும் அளவு உயரமானது, அண்மையில் பெய்த மழையால் சேற்றுழவு, வரப்பு வைத்தல், நாற்றாங்கால் நடவு அதைத் தொடா்ந்து நடவுப் பணி நடைபெற்று வருகிறது. இதில் இயந்திரங்களின்றி பெண் தொழிலாளா்கள் நாற்று நடவு செய்து வருகின்றனா்.

வெளிசந்தையில் பெரும்பாலும் கிடைக்காத இந்த நெல் ரகம், சத்தியமங்கலம் பகுதியில் மட்டுமே நடவு செய்யப்படுகிறது. சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வருதல், கேன்சா் செல்களை அழிக்கக்கூடியவை, தொலைதூர பயணித்துக்கு ஏற்ற உணவு என்பதால் பசி ஏற்படுத்தாது போன்ற மருத்துவ குணம் கொண்டுள்ளதால் சாதாரண அரிசி கிலோ ரூ.80 ஆக உள்ள நிலையில் காட்டுயானம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பேருந்து சக்கரத்தில் சிக்கி காவலாளி உயிரிழப்பு

ஈரோட்டில் பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலாளி உயிரிழந்தாா். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அஜந்தா நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் (75). தனியாா் நிறுவன காவலாளி. இ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை

குடும்பப் பிரச்னையால் ஈரோட்டில் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு பெரியசேமூா் வேலன் நகரைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி சாந்தி (56). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை. இவ... மேலும் பார்க்க

தீபாவளி: கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பில் நெசவாளா்கள் தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் பகுதியில் கைத்தறி பட்டுச் சேலை தயாரிப்பில் நெசவாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். தமிழ்நாட்டு பெண்களின் பாரம்பரிய உடையாக கைத்தறி புடவைகள் உள்ளன. கைத்தறி சேலைகள... மேலும் பார்க்க

சிறந்த புத்தகங்களே அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க அடித்தளமிடும்

சிறந்த புத்தகங்களே அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க அடித்தளமிடுகின்றன என்று நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூ செஞ்சுரி புத்தக ... மேலும் பார்க்க

கோபியில் ரூ.11 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.11 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை நடைபெற்றது. கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை வாழை... மேலும் பார்க்க

சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில்மனைகளை பெற விண்ணப்பிக்கலாம்

பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில்மனைகளை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு... மேலும் பார்க்க