செய்திகள் :

சப் கலெக்டர் தற்கொலை விவகாரம்; லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய பஞ்சாயத்து தலைவி மீது வழக்கு!

post image

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மலையாலப்புழா பகுதியைச் சேர்ந்த நவீன் பாபு, கண்ணூர் மாவட்ட சப் கலெக்டராக பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி மஞ்சுஷா பத்தனம்திட்டா கோனி தாசில்தாராக பணிபுரிந்துவருகிறார். இவர்களுக்கு  2 மகள்கள் உள்ளனர். நவீன் பாபுவும், அவரது மனைவி மஞ்சுஷாவும் சி.பி.எம் பணியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பணியில் இருந்து ஓய்வுபெற இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் சொந்த ஊரான பத்தனம்திட்டாவுக்கு பணியிடமாறுதல் கேட்டுப்பெற்றார் நவீன் பாபு. பணியிடமாறுதலாகிச் செல்லும் நவீன் பாபு-வை வழியனுப்பிவைக்கும் நிகழ்ச்சி கண்ணூர் கலெக்டர் அலுவலக மினி மீட்டிங் ஹாலில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.

தற்கொலை செய்துகொண்ட சப் கலெக்டர் நவீன் பாபு

அந்த நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக கலந்துகொண்ட சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவி திவ்யா, சப் கலெக்டர் நவீன் பாபு ஒரு பெட்ரோல் பம்ப்-க்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டினார்.

இதனால் மனம் உடைந்த நவீன்பாபு அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு தனது அரசு குடியிருப்புக்குச் சென்றநிலையில், கடந்த 15-ம் தேதி காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதற்கு முன்பு எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத சப் கலெக்டர் மீது லஞ்சம் குற்றச்சாட்டு கூறிய மாவட்ட பஞ்சாயத்து தலைவி திவ்யா-வுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

மேலும், அந்த பெட்ரோல் பம்ப் திவ்யாவின் கணவரின் பினாமி பெயரில் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. திவ்யா-வுக்கு எதிராகவும், நவீன் பாபு-வுக்கு ஆதரவாகவும் பத்தனம்திட்ட சி.பி.எம் நிர்வாகிகள் குரல்கொடுத்துள்ளனர். நவீன் பாபு நல்ல அதிகாரி எனவும். இந்த சம்பவம்குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் உத்தரவிட்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட சப் கலெக்டர் நவீன் பாபு

இந்த நிலையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து விலகும்படி திவ்யாவுக்கு சி.பி.எம் தலைமை கூறியுள்ளது. மேலும், திவ்யா மீது போலீஸ் வழக்குப்பதிவும் செய்துள்ளது. இதற்கிடையே, பெட்ரோல் பம்ப்-க்கு தடையில்லா சான்றுக்காக சப் கலெக்டர்  98,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்த பிரசாந்திடம் விஜிலென்ஸ் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களையோ. வங்கியில் இருந்து பணம் எடுத்ததற்கான ஆதரங்களையோ பிரசாந்தால் சமர்ப்பிக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Lawrence Bishnoi: 700 துப்பாக்கிச்சூடு கொலையாளிகள்; சிறைக்குள்ளிருந்தபடியே கட்டுப்படுத்தும் லாரன்ஸ்!

அரசியல் தலைவர் பாபா சித்திக் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கு பகுதியில் அவரைச் சுட்டு வீழ்த்திய நபர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற... மேலும் பார்க்க

கண் இமைக்கும் நேரத்தில் சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை; கதறிய தாய்... வால்பாறையில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்குள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளி... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: சல்மான் கானை கொல்லத் துடிக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் - யார் இந்த கேங் லீடர்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான்26 வருடங்களுக்கு முன்பு, செய்த தவறு, இப்போதுஅவரை துப்பாக்கிமுனையில்துரத்திக் கொண்டு இருக்கிறது. 1998-ல் ராஜஸ்தான் மாநிலம்,ஜோத்பூரில் 2 மான்களை சல்மான் கான் வேட்டையாடிய சம்ப... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு... சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞர்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்து வந்த ராணிக்கும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு... மேலும் பார்க்க

Baba Siddique murder: பிஷ்னோய் கூட்டாளிகள் 5 பேர் கைது; குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்!

மும்பையில் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 2 பேர் உள்பட நா... மேலும் பார்க்க

Pannun Murder Plot : முன்னாள் RAW அதிகாரி; FBI -ஆல் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த விகாஸ் யாதவ்?

அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்தி... மேலும் பார்க்க