செய்திகள் :

Canada-India: "ஆதாரத்தை இன்னும் கொடுக்கவில்லை.." - கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியத் தூதர் பதில்

post image

சில ஆண்டுகளாகவே மோசமடைந்து வந்த இந்திய - கனடா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, கடந்த வாரம் இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றதன் மூலமாக இன்னும் மோசமாகியுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவு தலைவர் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னணியில் இந்தியா இருக்கிறது என்று கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா உயர் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியதிலிருந்து இந்தப் பிரச்னை தொடங்கியது. இந்த குற்றச்சாட்டை ஆரம்பத்திலிருந்தே இந்தியா மறுத்து வந்தது. ஆனால், கனடாவோ, நிஜ்ஜார் கொலைக்குப் பின்னால் கனடாவில் இருக்கும் தூதரகத்தின் உயரதிகாரி சஞ்சய் குமார் வர்மாதான் இருக்கிறார் என்று உறுதியாகக் குற்றம் சாட்டியது.

தொடர்ந்து இந்தியாவை குற்றம் சாட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான், கடந்த வாரம் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட கனடாவிலிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப்பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு சஞ்சய் குமார் வர்மா அளித்த பேட்டியில், "எந்தவொரு கொலையாக இருந்தாலும், அது மிகவும் தவறு. நானும் அதைக் கடுமையாக எதிர்கிறேன். இதை இதற்கு முன்பு பல நேர்காணல்களில் கூறியுள்ளேன்.

நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீதான குற்றச்சாட்டிற்கான ஆதாரத்தைக் கனடா இன்னும் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காகப் புனையப்பட்ட குற்றம். இந்தியா மீது ஜஸ்டின் குற்றம் சாட்டுவது எந்த ஆதாரத்தை வைத்தும் அல்ல... வெறும் உளவுத்துறை தகவல் அடிப்படையில்தான். நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக, கொலை குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தைக் கேட்டு வருகிறோம். ஆனால், அவர்கள் அதைச் சமர்ப்பிக்கவில்லை" என்று பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Trump: 'பிரெஞ்ச் ஃபிரைஸ் செய்த டிரம்ப்' - அதிபர் தேர்தலுக்கு டிரம்ப் நூதனப் பிரசாரம்! | Video

'தேர்தல் வந்துட்டாப் போதும்... சின்ராசை கையில புடிக்க முடியாது' என்பதுபோல நம்மூர் வேட்பாளர்கள் வாக்குகளை அள்ளப் பல வித்தியாசமான பிரசார யுத்திகளில் இறங்குவார்கள். அதில் ஒன்றுதான் சமையல். அதாவது, அவரவர்... மேலும் பார்க்க

Andhra: "இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்குத்தான்.." - சந்திரபாபு நாயுடுவின் அடுத்த திட்டம்!

உலக நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. இந்நிலையில், 2023-ல் UNFPA -இன் உலக மக்கள்தொகை அறிக்கையின்படி, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முந்தியது. சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கையை ... மேலும் பார்க்க

Kashmir: தீவிரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; உமர் அப்துல்லா, நிதின் கட்காரி சொல்வதென்ன?

நேற்று இரவு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.காஷ்மீரில் ஶ்ரீநஜர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதில் பணிபுரிபவர்கள் வேலையை முடித்துவிட்டு, நேற்று (அக்ட... மேலும் பார்க்க

பேரழிவுகாரன் முசோலினி சந்தித்த துரோகங்கள் - வரலாற்று தொடர்! | History | Mussolini Web series #5

'முசோலினி' ஒரு பக்கம் ஹீரோவாகவும், இன்னொரு பக்கம் வில்லனாகவும் பார்க்கப்படுகின்ற ஒருவர். உண்மையிலேயே முசோலினி என்பவர் யார்? அவர் சிங்கமா... ஆடா?! அவருடைய ஒட்டுமொத்தமான வாழ்க்கை வரலாறையும், நம்முடைய 'ஜ... மேலும் பார்க்க

துணை முதல்வர் நிகழ்ச்சி நடந்த இடத்தில், பைக்கில் வட்டமடித்து சத்தமிட்ட தவெக-வினர்... சேலம் சலசலப்பு!

தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கொங்கு மண்டலம் இருந்து வருகிறது. ஏற்கெனவே கொங்கு மண்டலம் தனது கோட்டை என்று சொல்லி வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாக, தி... மேலும் பார்க்க