செய்திகள் :

Trump: 'பிரெஞ்ச் ஃபிரைஸ் செய்த டிரம்ப்' - அதிபர் தேர்தலுக்கு டிரம்ப் நூதனப் பிரசாரம்! | Video

post image

'தேர்தல் வந்துட்டாப் போதும்... சின்ராசை கையில புடிக்க முடியாது' என்பதுபோல நம்மூர் வேட்பாளர்கள் வாக்குகளை அள்ளப் பல வித்தியாசமான பிரசார யுத்திகளில் இறங்குவார்கள். அதில் ஒன்றுதான் சமையல். அதாவது, அவரவர் தொகுதியில் எது பிரபலமோ அதற்கேற்ற மாதிரி பரோட்டோ போடுவார்கள்... வடை, தோசை சுடுவார்கள்... டீ ஆற்றுவார்கள் - இது இங்கு மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பிரபலம் போல.

அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் களம் காண்கிறார். தேர்தல் பிரசாரத்திற்காக, பென்சில்வேனியா சென்ற டிரம்ப் மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக பிரென்ச் ஃபிரைஸ் செய்து, அதைப் பக்காவாக பேக் செய்துள்ளார்.

இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள காணொளியில், மெக் டொனால்ட் நிர்வாகியிடம், "எனக்கு வேலை வேண்டும். எனக்கு மெக் டொனால்ட் கடையில் வேலை செய்ய வேண்டும் என்பது ஆசை" என்று டிரம்ப் கேட்கிறார். பின்னர் பிரன்ச் ஃபிரைஸ் தயாரித்து, வாடிக்கையாளருக்கு விநியோகம் வழங்குகிறார்.

Canada-India: "ஆதாரத்தை இன்னும் கொடுக்கவில்லை.." - கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியத் தூதர் பதில்

சில ஆண்டுகளாகவே மோசமடைந்து வந்த இந்திய - கனடா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, கடந்த வாரம் இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றதன் மூலமாக இன்னும் மோசமாகியுள்ளது.கனடாவில் காலிஸ்தான் டைகர் பட... மேலும் பார்க்க

Andhra: "இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்குத்தான்.." - சந்திரபாபு நாயுடுவின் அடுத்த திட்டம்!

உலக நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. இந்நிலையில், 2023-ல் UNFPA -இன் உலக மக்கள்தொகை அறிக்கையின்படி, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முந்தியது. சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கையை ... மேலும் பார்க்க

Kashmir: தீவிரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; உமர் அப்துல்லா, நிதின் கட்காரி சொல்வதென்ன?

நேற்று இரவு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.காஷ்மீரில் ஶ்ரீநஜர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதில் பணிபுரிபவர்கள் வேலையை முடித்துவிட்டு, நேற்று (அக்ட... மேலும் பார்க்க

பேரழிவுகாரன் முசோலினி சந்தித்த துரோகங்கள் - வரலாற்று தொடர்! | History | Mussolini Web series #5

'முசோலினி' ஒரு பக்கம் ஹீரோவாகவும், இன்னொரு பக்கம் வில்லனாகவும் பார்க்கப்படுகின்ற ஒருவர். உண்மையிலேயே முசோலினி என்பவர் யார்? அவர் சிங்கமா... ஆடா?! அவருடைய ஒட்டுமொத்தமான வாழ்க்கை வரலாறையும், நம்முடைய 'ஜ... மேலும் பார்க்க

துணை முதல்வர் நிகழ்ச்சி நடந்த இடத்தில், பைக்கில் வட்டமடித்து சத்தமிட்ட தவெக-வினர்... சேலம் சலசலப்பு!

தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கொங்கு மண்டலம் இருந்து வருகிறது. ஏற்கெனவே கொங்கு மண்டலம் தனது கோட்டை என்று சொல்லி வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாக, தி... மேலும் பார்க்க