செய்திகள் :

``கொலை மிரட்டல்'' மனம் திறந்த சல்மான்; ``அவருக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்'' -முன்னாள் காதலி சோமி

post image

கொலை மிரட்டல்..

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கின்றனர். சல்மான் கான் 1998ம் ஆண்டு ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரி இந்த மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதற்காக சல்மான் கானை கொலை செய்யக்கூட முயற்சி நடந்தது. சல்மான் கானை பயமுறுத்தவேண்டும் என்பதற்காக அவரது நண்பரான முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை கடந்த 12ம் தேதி லாரன்ஸ் பிஷ்னோய் ஆள்கள் சுட்டுக்கொலை செய்தனர்.

லாரன்ஸ் பிஷ்னோய்

தீவிர பாதுகாப்பு

அதோடு இரண்டு நாள்களுக்கு முன்பு நடிகர் சல்மான் கான் ரூ.5 கோடி கொடுக்கவில்லையெனில் பாபா சித்திக்கிற்கு ஏற்பட்டதை விட மோசமான நிலை ஏற்படும் என்றும், பணத்தை கொடுத்து பகையை தீர்த்துக்கொள்ளும்படியும் கூறி கொலை மிரட்டல் மெசேஜ் ஒன்றும் வந்தது. மும்பை போக்குவரத்து பிரிவு காவலர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு இந்த மெசேஜ் வந்தது. லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டலை தொடர்ந்து சல்மான் கானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிக்பாஸ் ஷூட்டிங்கில் சல்மான் கான்

இக்கொலை மிரட்டல்களை பற்றி கவலைப்படாமல் சல்மான் கான் தனது வேலையைத் தொடங்கிவிட்டார். பிக்பாஸ்க்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது தான் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார். பிக்பாஸ் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உடனே பாபா சித்திக்கை காண சல்மான் கான் ஓடி வந்தார். தற்போது பிக்பாஸ் படப்பிடிப்பில் தீவிரம் கவனம் செலுத்தி வரும் சல்மான் கான் அடுத்த கட்டமாக சிகந்தர் படப்பிடிப்பையும் தொடர முடிவு செய்துள்ளார். பிக்பாஸ் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து போட்டியாளர்களுடன் சல்மான் கான் பகிர்ந்து கொண்டார்.

சல்மான் கான் - பாபா சித்திக்

அப்போது அவர்,''நான் இங்கு வரக்கூடாது என்றுதான் நினைத்தேன். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும், ஏற்றுக்கொண்ட பணியை முடிப்பதற்காக வந்திருக்கிறேன். சத்தியமாக சொல்கிறேன். நான் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளேன். கடுமையான நெருக்கடியிலும் நான் இங்கு வந்து அதனை சமாளித்துக்கொண்டிருக்கிறேன்''என்று தெரிவித்தார். பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் கூடுதலாக 60 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் காதலி சோமி அலி விளக்கம்:

இதற்கிடையே சர்ச்சைக்குறிய மான் குறித்துசல்மான் கானுக்கு தெரியாது என்று அவரது முன்னாள் காதலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை சோமி அலி கூறுகையில்,''நான் சல்மான் கானுடன் இது குறித்து விவாதித்தேன். பிளாக்பக் வகை மான்கள் பிஷ்னோய் இன மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தனக்கு தெரியாது என்றும், அவற்றை தெய்வமாக வழிபாடு செய்கிறார்கள் என்று தெரியாது என்றும் தெரிவித்தார். இதனை பிஷ்னோய் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். நான் சல்மான் கானுடன் படப்பிடிப்பில் பல முறை வேட்டைக்கு சென்று இருக்கிறேன்.

சோமி அலி, சல்மான் கான்

அன்றைக்கு நானும் சல்மான் கானுடன் வேட்டைக்கு செல்வதாக இருந்தது. ஆனால், அவர்தான் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தெரியாத ஒன்றுக்காக அவர் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கவனக்குறைவாக, தற்செயலாக எதையாவது செய்து, அதற்காக மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்துவது போன்று இது இருக்கிறது. இதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் (சல்மான்) மிகவும் திமிர் பிடித்தவர் என்றும், அவருக்கு நற்பெயர் இருப்பதாகவும் மக்கள் கூறுகிறார்கள். எனக்கும் அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் இன்று எந்த சம்பந்தமும் இல்லை. பாலிவுட் அல்லது ஹாலிவுட்டில் யாரும் கொலை செய்யப்படுவதை நான் விரும்பவில்லை. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Organ Donor: இதயத்தை அகற்றத் தயாரான மருத்துவர்கள்; கண் விழித்த இளைஞர்... அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவின் கென்டக்கியில் வசிப்பவர் தாமஸ் டிஜே ஹூவர் (36). இவர் போதைப் பொருளை அதிகமாக உட்கொண்டதால் திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோ... மேலும் பார்க்க

``நிறைய திருமணம் செய்து, திருமணத்தின் கடவுளாக வேண்டும்..'' - ஜப்பான் இளைஞரின் இலக்கு!

ஜப்பானின் ஹொக்கைடோவின் வடக்கு மாகாணத்தில் வசிப்பவர் ரியுதா வதனாபே. 36 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வாழ்ந்து வருகிறார். இவரின் பெரும் ஆசை... கனவு... திருமணத்தின் கடவுள் ஆக வேண்டும் ... மேலும் பார்க்க

``மான்களை வேட்டையாடவில்லை.. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கமுடியாது'' - சல்மான் கான் தந்தை விளக்கம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் 1998ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றபோது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இது இன்னும் சல்ம... மேலும் பார்க்க

1951-ல் காணாமல் போன சிறுவன்... 70 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த மருமகன்.. நெகிழ வைத்த சம்பவம்!

70 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மாமாவை, மருமகன் தேடி கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் அர்மாண்டோ அல்பினோ. இவர் பிப்ரவரி 21,1951 அன்று மாலை கலிபோர்ன... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக குறையாத கரன்ட் பில்; வெளிவந்த உண்மை... அதிர்ந்துபோன வீட்டு உரிமையாளர்! - என்ன நடந்தது?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கென் வில்சன் என்ற நபர் 15 ஆண்டுகளாக தனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் சேர்த்து மின்சார கட்டணம் செலுத்திக்கொண்டிருந்ததை சமீபத்தில் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளா... மேலும் பார்க்க

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்தஜாங்யாங்(Zhong Yang)குக்கு13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒருமில்லியன்யுவான்(சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற... மேலும் பார்க்க