செய்திகள் :

தீபாவளி: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள்!

post image

தீபாவளி பண்டிகையையொட்டி எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, திருச்சி, மதுரை, நெல்லை, திருவண்ணாமலை, தஞ்சை செல்வோருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தனிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரத்தில் இருந்து ஆந்திரம், சேலம், கும்பகோணம், திருச்சிக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒரு வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பல்வேறு ஊர்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3 நாள்களுக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தீபாவளிப் பண்டிகையையொட்டி நெரிசலைக் குறைக்கப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.ஹுப்பள்ளியில் இருந்து மங்களூருக்கு நவ. 2-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுவழித்... மேலும் பார்க்க

தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

விக்ரம் நடித்து திரையரங்குகளில் வெளியான தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆ... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி குரூப் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்... மேலும் பார்க்க

துணை முதல்வர் பதவி இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு: உதயநிதி ஸ்டாலின்

சேலம்: துணை முதல்வர் பதவி என்பது இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு எனவும், இளைஞா் அணியில் சிறப்பாக உழைப்பவா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த... மேலும் பார்க்க

பிரான்ஸ் கல்விச் சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் "கனவு ஆசிரியர் விருது" பெற்ற 55 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023-24 ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது... மேலும் பார்க்க

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சேலம்: எனக்கு தங்கை துளசிமதி உந்துசக்தியாக உள்ளாா். அவரின் சாதனைகள், பதக்கங்களை பாா்க்கும்போது, வாரம் ஒருமுறை ஒருமணி நேரமாவது பேட்மிண்டன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என துணை முதல்வா் உதயநிதி ஸ... மேலும் பார்க்க