செய்திகள் :

தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

post image

விக்ரம் நடித்து திரையரங்குகளில் வெளியான தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆக.15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், வைணவர்களை அவமதிக்கும் வகையில் இப்படத்தின் காட்சிகள் இருப்பதால், தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று பொற்கொடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க: ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவர்களை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இப்படம் ஓடிடியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் பெற்று திரையரங்கில் வெளியான பின், ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில உள்நாட்டு உற்பத்தியில் பணித் துறையின் பங்களிப்பு அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாட்டின் மாநில மொத்... மேலும் பார்க்க

தீபாவளிப் பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தீபாவளிப் பண்டிகையையொட்டி நெரிசலைக் குறைக்கப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.ஹுப்பள்ளியில் இருந்து மங்களூருக்கு நவ. 2-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுவழித்... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி குரூப் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்... மேலும் பார்க்க

தீபாவளி: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையையொட்டி எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேர... மேலும் பார்க்க

துணை முதல்வர் பதவி இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு: உதயநிதி ஸ்டாலின்

சேலம்: துணை முதல்வர் பதவி என்பது இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு எனவும், இளைஞா் அணியில் சிறப்பாக உழைப்பவா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த... மேலும் பார்க்க

பிரான்ஸ் கல்விச் சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் "கனவு ஆசிரியர் விருது" பெற்ற 55 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023-24 ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது... மேலும் பார்க்க