செய்திகள் :

``நிறைய திருமணம் செய்து, திருமணத்தின் கடவுளாக வேண்டும்..'' - ஜப்பான் இளைஞரின் இலக்கு!

post image

ஜப்பானின் ஹொக்கைடோவின் வடக்கு மாகாணத்தில் வசிப்பவர் ரியுதா வதனாபே. 36 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வாழ்ந்து வருகிறார். இவரின் பெரும் ஆசை... கனவு... திருமணத்தின் கடவுள் ஆக வேண்டும் என்பதுதான் என்கிறார்.

இவரைப் பற்றி ஜப்பான் செய்தி நிறுவனம் ஓன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், ``தற்போது இரண்டு மனைவிகள், இரண்டு தோழிகள் என்ற அடிப்படையில் நான்கு பேருடன் வசித்து வரும் ரியுதா வதனாபே, இதற்கு முன்னர் ஒரு பெண்ணை விட்டு பிரிந்துவிட்டார். முழுக்க முழுக்க மனைவிகளின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருகிறார். வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்வது, குழந்தைகளை பராமரிப்பது, சமையல் போன்ற பணிகளை செய்துவருகிறார்.

Ryuta Watanabe

இவர்களுக்கு 10 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குடும்பத்தின் மாத செலவு 914,000 யென்கள் (ரூ. 5 லட்சம்) நான்கு பெண்களும் பிரித்துக்கொள்கின்றனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலியை பிரிந்த சோகத்தில், மனமுடைந்த ரியுதா வதனாபே டேட்டிங் செயலிகளை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். அது அப்படியே திருமணம், காதலி, தோழி என வளர்ந்து நிற்கிறது.

சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், ''நான் பெண்களை நேசிக்கிறேன். நாம் ஒருவரையொருவர் சமமாக நேசிக்கும் வரை, எந்த பிரச்னையும் இருக்காது. நிறைய திருமணம் செய்து, 54 குழந்தைகள் பெற்று திருமணத்தின் கடவுளாக வேண்டும் என்பதுதான் என் ஆசை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``மான்களை வேட்டையாடவில்லை.. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கமுடியாது'' - சல்மான் கான் தந்தை விளக்கம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் 1998ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றபோது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இது இன்னும் சல்ம... மேலும் பார்க்க

1951-ல் காணாமல் போன சிறுவன்... 70 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த மருமகன்.. நெகிழ வைத்த சம்பவம்!

70 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மாமாவை, மருமகன் தேடி கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் அர்மாண்டோ அல்பினோ. இவர் பிப்ரவரி 21,1951 அன்று மாலை கலிபோர்ன... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக குறையாத கரன்ட் பில்; வெளிவந்த உண்மை... அதிர்ந்துபோன வீட்டு உரிமையாளர்! - என்ன நடந்தது?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கென் வில்சன் என்ற நபர் 15 ஆண்டுகளாக தனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் சேர்த்து மின்சார கட்டணம் செலுத்திக்கொண்டிருந்ததை சமீபத்தில் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளா... மேலும் பார்க்க

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்தஜாங்யாங்(Zhong Yang)குக்கு13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒருமில்லியன்யுவான்(சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற... மேலும் பார்க்க