செய்திகள் :

Bloody Beggar: `இந்தப் படத்தோட கதை ரொம்ப சிம்பிள்தான், ஆனால்...'- `பிளடி பக்கர்' குறித்து கவின்

post image
இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பக்கர்'.

இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பிளடி பக்கர்

அதில் பேசிய நடிகர் கவின், " இந்த படத்தில் தான் கதையையே கேட்கவில்லை. படத்தின் சூட்டின் உள்ளிட்ட டீடெயிலை மட்டுமே கேட்டேன். அந்த அளவிற்கு இயக்குநர்மீது நம்பிக்கை இருந்தது. நெல்சன் திலீப்குமார், சிவபாலன் முத்துக்குமார் உள்ளிட்டவர்களுக்கு இது முதல் முயற்சி என்பதால் இந்த படத்தை மேலும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதில் தான் தீவிரமாக செயல்பட்டேன். இந்தப் படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் உள்ளிட்டவற்றின் மூலம் படம் குறித்த ஒரு நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

மேலும் இந்த படம் குறித்து தன்னிடம் பேசிய நெல்சன் திலீப்குமார் பண்ணிடுவியாடா என்று மட்டுமே தன்னிடம் கேட்டார். நான் பண்ணிடுவேன் என்று தலையாட்டினேன். இது மட்டும் தான் தங்களுக்குள் துவக்கத்தில் படம் குறித்த பேச்சாக இருந்தது. தன்மீதும் தன் நடிப்பு மீதும் நெல்சன் திலீப் குமார் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்ற முழு வீச்சில் செயல்பட்டேன். நடிப்பில் முழுவதுமாக இறங்குவதற்கு முன் மாதத்தில் இவ்வளவு சம்பாதித்தால் போதும் என்ற மனநிலையிலேயே இருந்தது. அடுத்தடுத்து தனக்கு அமைந்த படங்கள் தன்னுடைய நம்பிக்கையை கூட்டியது.

கவின்

இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் கதை ரொம்ப சிம்பளாகத்தான் இருக்கும். டிரைலர் பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இது வேறுமாதிரியான ஸ்டைலில் இருக்கும். அந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிவபாலனின் முதல் இயக்கம், நெல்சன் அண்ணாவின் முதல் தயாரிப்பு. அதனால் இந்தப் படத்தில் நடிக்காமல் ஒரு பகுதியாக இருந்தால் கூட நான் சந்தோஷமாக இருந்திருப்பேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Bloody Beggar: `கவின் இந்தப் படத்துக்கு வேண்டாம்னு சொன்னேன், ஆனா...' - நெல்சன் ஓப்பன் டாக்

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பக்கர்'.இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் ச... மேலும் பார்க்க

Leo: "'லவ் யூ சோ மச்' விஜய் அண்ணா"- லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சி பதிவு

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 19- ம் தேதி வெளியான திரைப்படம் 'லியோ'. இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு அனிருத் இசை... மேலும் பார்க்க

`’சார்’ போஸ்டர்.. பக்கத்துலயே அம்மாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’ - தாயை இழந்து தவிக்கும் போஸ் வெங்கட்

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டின் அம்மா ராஜாமணி நேற்று காலமானார். வயோதிகம் காரணமாக கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அவரின் உடல் அடக்கம் இன்ற... மேலும் பார்க்க

Srividya: நிறைவேறாத ஆசை, துரோகம்; நோயுடன் போராட்டம்... மனிதத்தை நேசித்த ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை!

சினிமா... பெரும் கனவுக் கடல். அதில் மூழ்கி முத்தெடுத்தவர்களை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆனால், அந்தக் கடலின் சுழலில் சிக்கி காணாமல் போனவர்கள் ஏராளம். அவர்களை அடையாளம் காணக் கூட இந்த பரபரப்பு வாழ்க்க... மேலும் பார்க்க

Amaran: `சிவகார்த்திகேயனின் மாஸ் என்ட்ரி!' - `அமரன்' ஆடியோ லாஞ்ச் க்ளிக்ஸ்! | Photo Album

Amaran Audio LaunchAmaran Audio LaunchAmaran Audio Launch - Sai Pallavi Amaran Audio Launch - Gv PrakashAmaran Audio Lauch- SivakarthikeyanAmaran Audio Lauch- Rajkumar Perisamy மேலும் பார்க்க

Amaran: `தளபதியோட அன்பு'; `தல அஜித் கொடுத்த ஊக்கம்'; `ரஜினி கமல் நட்பு' - சிவகார்த்திகேயன் கலகல

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் `அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாய் ராம் கல்லூரியில் ந... மேலும் பார்க்க