செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: ``யானை ஜெயமால்யதாவுக்கு பிறந்தநாள்..'' - உற்சாகமாக கொண்டாடிய கோயில் நிர்வாகம்!

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் 108 திவ்ய தலங்களில் ஒன்றாகும். நாள்தோறும் இக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வர். இந்த கோயில் யானை ஜெயமால்யதாவிற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பழம் வழங்கல்..

தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் சிறப்புப் பெற்ற இந்த கோயிலில் யானை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு திருக்கோஷ்டியூர் சௌமியா நாராயண பெருமாள் கோவில் டிரஸ்ட் சார்பாக ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை வழங்கப்பட்டது. அந்த யானைக்கு, 'ஜெயமால்யதா' என பெயர் சூட்டி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆண்டாள் கோவிலில் பராமரித்து வளர்த்து வருகின்றனர்.

கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி பிறந்த ஜெயமால்யதா யானை, தனது 23வயதை பூர்த்தி செய்ததையடுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் அதன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பூஜை

அதன்படி யானை ஜெயமால்யதாவிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பழங்கள், மற்றும் காய்கறிகளை அவர்கள் கரங்களாலே யானைக்கு தரப்பட்டது. பிறந்தநாள் கொணடாட்டத்தில் மகிழ்ச்சியுற்ற யானை ஜெயமால்யதா கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தலையை ஆட்டியபடியே ஆசிர்வாதம் செய்தது பக்தர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளாவில் பிரபலமான எடலாபுரம் சாமுண்டி தெய்யம்... பாரம்பர்ய சடங்கு நடனம்.. | Photo Album

எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி... மேலும் பார்க்க

புரட்டாசி பௌர்ணமி... மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 5 கருட சேவை..| Photo Album

ஐந்து 5 கருட சேவையில் கூடலழகர் ஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்த... மேலும் பார்க்க