செய்திகள் :

Bloody Beggar: `கவின் இந்தப் படத்துக்கு வேண்டாம்னு சொன்னேன், ஆனா...' - நெல்சன் ஓப்பன் டாக்

post image
இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பக்கர்'.

இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில் பேசிய நெல்சன், " சிவபாலன் எனக்கு 15 வருடப் பழக்கம். ஜெயிலர் படம் வரை என்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

பிளடி பக்கர்

ஜெயிலர் படத்தின்போதுதான், இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அப்படியே படத்தையும் நீங்களே தயாரியுங்கள் என்றார். அப்போது ஜெயிலர் படம் இயக்கிக் கொண்டிருந்ததால் இந்த படம் வெற்றி அடைந்தால் படம் தயாரிக்கிறேன் என்றேன். ஜெயிலர் படம் வெற்றியடைய வேண்டும் என என்னை விட சிவபாலன் அதிகம் வேண்டியிருப்பார். பிறகு ஜெயிலரும் வெற்றியடைந்தது. அதன்பின் யோசித்தேன், நான் படம் தயாரிப்பது எனக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். எனவே இந்த படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன். நான் கவினை வைத்து இந்த படத்தை இயக்குகிறேன் என சிவபாலன் கூறினார்.

அப்போது 'டாடா' படம் கூட வெளியாகவில்லை, அந்த நேரத்தில் கவின் வேண்டாம் என முதலில் நான்தான் மறுத்தேன். உன்னுடைய நட்பை ஒதுக்கிவை என்றேன். அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால், அதை நேரம் வரும்போது நானே செய்கிறேன் என்றேன். தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களிடம் பேசலாம் என சொன்னேன். ஆனால் கவின்தான் நடிக்க வேண்டும் என சிவபாலன் உறுதியாக இருந்தார்.

நெல்சன்

அதன் பிறகு கவினுக்கு லுக் டெஸ்ட் செய்து காண்பித்தனர், பிறகு ஓரளவிற்கு நம்பிக்கை வந்தது. பெரிதாக நான் படத்தில் தலையிடவில்லை. நான் தான் தயாரிப்பாளர் என்பதற்காகப் படப்பிடிப்பு தளத்தில் சுற்றினேன். ஒட்டுமொத்த படம் முடித்த பிறகு படம் பார்த்தேன், ஆச்சர்யம் அடைந்தேன். இந்த படத்தில் சிவபாலனைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் கவின் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் கவின் நடிக்க வேண்டாம் என மறுத்தது தவறு என புரிந்து கொண்டேன்.

நான் படம் தயாரிக்கக் காரணமே புதுவிதமான கதைக்களம்தான். த்ரில்லர் கதையை டார்க் காமெடியுடன் சேர்த்து அற்புதமாகச் செய்திருக்கிறார். 'பிளடி பக்கர்' படத்துடன் நண்பர் சிவகார்த்திகேயனின் அமரனும், ஜெயம் ரவியின் 'பிரதர்' படம் ஒன்றாக தீபாவளிக்கு வருகிறது. மூன்று படமும் வெற்றியடைய வேண்டும்.

நெல்சன்

பணம் உள்ளதே என தயாரிக்கக் கூடாது, படம் தீர்மானிக்க வேண்டும். நண்பர்களுக்காக படம் செய்யக் கூடிய ஆள் நான் இல்லை." என்று பேசியிருக்கிறார்.

நெல்சன் பேசியவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Bloody Beggar: `இந்தப் படத்தோட கதை ரொம்ப சிம்பிள்தான், ஆனால்...'- `பிளடி பக்கர்' குறித்து கவின்

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பக்கர்'.இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் ச... மேலும் பார்க்க

Leo: "'லவ் யூ சோ மச்' விஜய் அண்ணா"- லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சி பதிவு

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 19- ம் தேதி வெளியான திரைப்படம் 'லியோ'. இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு அனிருத் இசை... மேலும் பார்க்க

`’சார்’ போஸ்டர்.. பக்கத்துலயே அம்மாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’ - தாயை இழந்து தவிக்கும் போஸ் வெங்கட்

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டின் அம்மா ராஜாமணி நேற்று காலமானார். வயோதிகம் காரணமாக கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அவரின் உடல் அடக்கம் இன்ற... மேலும் பார்க்க

Srividya: நிறைவேறாத ஆசை, துரோகம்; நோயுடன் போராட்டம்... மனிதத்தை நேசித்த ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை!

சினிமா... பெரும் கனவுக் கடல். அதில் மூழ்கி முத்தெடுத்தவர்களை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆனால், அந்தக் கடலின் சுழலில் சிக்கி காணாமல் போனவர்கள் ஏராளம். அவர்களை அடையாளம் காணக் கூட இந்த பரபரப்பு வாழ்க்க... மேலும் பார்க்க

Amaran: `சிவகார்த்திகேயனின் மாஸ் என்ட்ரி!' - `அமரன்' ஆடியோ லாஞ்ச் க்ளிக்ஸ்! | Photo Album

Amaran Audio LaunchAmaran Audio LaunchAmaran Audio Launch - Sai Pallavi Amaran Audio Launch - Gv PrakashAmaran Audio Lauch- SivakarthikeyanAmaran Audio Lauch- Rajkumar Perisamy மேலும் பார்க்க

Amaran: `தளபதியோட அன்பு'; `தல அஜித் கொடுத்த ஊக்கம்'; `ரஜினி கமல் நட்பு' - சிவகார்த்திகேயன் கலகல

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் `அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாய் ராம் கல்லூரியில் ந... மேலும் பார்க்க