செய்திகள் :

தலித் இளைஞர் கொலை வழக்கு: ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

post image

தலித் இளைஞரின் கொலை வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பினிேபே விஸ்வரூப்பின் மகன் பினிபே ஸ்ரீகாந்தை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளார்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் நடந்த கலவரத்திற்குப் பிறகு, ஜூன் 6, 2022 அன்று துர்கா பிரசாத் என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவரின் புகாரின்பேரில் கடந்த சில நாள்களாக ஸ்ரீகாந்தை போலீஸார் தேடிவந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் மதுரையில் கடந்த அக்.18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மதுரையில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆந்திர மாநிலத்திற்குக் கொண்டு செல்வதற்கான அனுமதி கிடைத்தபின்னர், காவல்துறையினரால் ஆந்திரத்துக்கு ஸ்ரீகாந்த் அழைத்து வரப்பட்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முந்தைய அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் விஸ்வரூப். கடந்த 2022ல் கோனசீமா மாவட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பான வன்முறையின்போது அமலாபுரத்தில் உள்ள அவரது வீடு ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சரும் அவரது குடும்பத்தாரும் வீட்டில் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். நான் ஒரு மருத்துவர். எனக்கு உயிரைக் காப்பாற்ற மட்டுமே தெரியும். இந்த வழக்கில் தன்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

துர்கா பிரசாத் ஸ்ரீகாந்த்தின் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

தலித் இளைஞரின் கொலைக்கான காரணம் தெரியவில்லை. திட்டமிட்டு சதி செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீகாந்திடம் ஆந்திர போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிர புயலாக கரையைக் கடக்கும் ‘டானா’: வானிலை மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்... மேலும் பார்க்க

ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

ஒரே ஒருவர் விளையாட்டுக்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதால், ஒரு விமான நிறுவனம் சந்திக்கும் நஷ்டம் என்பது சற்றேறக்குறைய ரூ.3 கோடியாம்.அண்மையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப... மேலும் பார்க்க

சாலை விபத்து: உயிரிழப்பில் தமிழகத்துக்கு இரண்டாமிடம்!

நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.ஆனால், சாலை விபத்துகளால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதா... மேலும் பார்க்க

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள், ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர... மேலும் பார்க்க

புது வகை ஆன்லைன் மோசடி! ரூ. 60 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி! எப்படி நடந்தது?

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி 'இணையவழி கைது' எனும் ஆன்லைன் மோசடியால் ரூ. 60 லட்சத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி ஆன்லைன் பண மோசடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்... மேலும் பார்க்க

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் தேர்தலில் போட்டியிட முடியும்! சந்திரபாபு நாயுடு

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டு வரப் போவதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திர மக்கள்தொகையில... மேலும் பார்க்க