செய்திகள் :

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: "தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.." - உதயநிதி ஸ்டாலின் சொல்வது என்ன?

post image
"நேரடியாக இந்தியைத் திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

தூர்தர்ஷன் தமிழ் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டன. இதில், ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். இவ்வாறிருக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி வரும்போது அதை மட்டும் புறக்கணித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடலைப் பாடிய சம்பவம் பெரும் விவாதப்பொருளாக மாறியது.

உதயநிதி ஸ்டாலின்

பல அரசியல் தலைவர்கள் இந்த செயலுக்கு எதிராக தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், " தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்கச் சிலர் கிளம்பியுள்ளனர். தி.மு.க.,வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர். நேரடியாக இந்தியைத் திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர்" என்று தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

15 சந்திப்புகள், 340 மணி நேர ஆலோசனை; 12 தொகுதிகளுக்காக முட்டிமோதும் உத்தவ் தாக்கரே - காங்கிரஸ்!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க ஏற்கனவே 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில், ஆளும் மகாயுதி கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவனிக்கப்படாத ஆளுநர் ரவியின் ‘அபாய’ உரை! - முழு அலசல்

ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட `டிடி தமிழ் பொன்விழா - இந்தி மாத நிறைவு விழா' நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாட... மேலும் பார்க்க

"அதிக குழந்தைகளைப் பெற்றெடுங்கள்" - சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து ஸ்டாலினும் பேச்சு; பின்னணி என்ன?

நேற்று (அக்டோபர் 20) ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தென்னிந்திய மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசியிருந்த நிலையில், இன்று (அக்டோபர் 21) தமிழ்நாடு முதல்வரும் அதை வ... மேலும் பார்க்க

Trump: 'பிரெஞ்ச் ஃபிரைஸ் செய்த டிரம்ப்' - அதிபர் தேர்தலுக்கு டிரம்ப் நூதனப் பிரசாரம்! | Video

'தேர்தல் வந்துட்டாப் போதும்... சின்ராசை கையில புடிக்க முடியாது' என்பதுபோல நம்மூர் வேட்பாளர்கள் வாக்குகளை அள்ளப் பல வித்தியாசமான பிரசார யுத்திகளில் இறங்குவார்கள். அதில் ஒன்றுதான் சமையல். அதாவது, அவரவர்... மேலும் பார்க்க

Canada-India: "ஆதாரத்தை இன்னும் கொடுக்கவில்லை.." - கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியத் தூதர் பதில்

சில ஆண்டுகளாகவே மோசமடைந்து வந்த இந்திய - கனடா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, கடந்த வாரம் இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றதன் மூலமாக இன்னும் மோசமாகியுள்ளது.கனடாவில் காலிஸ்தான் டைகர் பட... மேலும் பார்க்க

Andhra: "இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்குத்தான்.." - சந்திரபாபு நாயுடுவின் அடுத்த திட்டம்!

உலக நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. இந்நிலையில், 2023-ல் UNFPA -இன் உலக மக்கள்தொகை அறிக்கையின்படி, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முந்தியது. சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கையை ... மேலும் பார்க்க