செய்திகள் :

15 சந்திப்புகள், 340 மணி நேர ஆலோசனை; 12 தொகுதிகளுக்காக முட்டிமோதும் உத்தவ் தாக்கரே - காங்கிரஸ்!

post image

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க ஏற்கனவே 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில், ஆளும் மகாயுதி கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முழுமையாக தொகுதி பங்கீடு முடியவில்லை. சிவசேனா(உத்தவ்) தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுத்துக்கொண்டே செல்கிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா(உத்தவ்), காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்திவிட்டன. இப்பேச்சுவார்த்தையில் பெரும்பாலான தொகுதியில் பங்கீடு முடிந்துவிட்ட போதிலும், இன்னும் 12 தொகுதிகளுக்கு உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது.

குறிப்பாக விதர்பா பகுதியில் 12 தொகுதிகளுக்கு காங்கிரஸ் மற்றும் சிவசேனா இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் தற்போது இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்கள் பிரச்னைக்குரிய தொகுதிகள் குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மற்றொரு புறம் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசி இருக்கின்றனர்.

இச்சந்திப்பு குறித்து சிவசேனா மூத்த தலைவர் அனில் தேசாய் கூறுகையில், ''பிரச்னைக்குரிய தொகுதிகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. சரத் பவார் காங்கிரஸ் தலைமையுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கு உடன்பாடு எட்டப்பட்டு இருக்கிறது'' என்றார். அவர்கள் சந்தித்துவிட்டு சென்ற பிறகு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் நசீம் கானும் சரத் பவாரை சந்தித்து பேசினர். மூன்று கட்சிகளும் இது வரை 15 முறை சந்தித்து 320 மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கின்றன. அப்படி இருந்தும் தொகுதி பங்கீட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருக்கிறது.

விதர்பாவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. அங்கு கால் பதிக்கவேண்டும் என்று சிவசேனா விரும்புகிறது. எனவேதான் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் மகாவிகாஷ் அகாடியில் 30 முதல் 40 தொகுதிகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானாபட்டோலே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''நாளை எங்களது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அறிவிக்கப்படும். அதற்கு முன்பு கூட்டணி தலைவர்கள் சந்தித்து தீர்வு காணப்படாமல் இருக்கும் தொகுதிகளுக்கு தீர்வு காண்பார்கள். காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலையும் நாளை வெளியிடும்'' என்று தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவனிக்கப்படாத ஆளுநர் ரவியின் ‘அபாய’ உரை! - முழு அலசல்

ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட `டிடி தமிழ் பொன்விழா - இந்தி மாத நிறைவு விழா' நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாட... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: "தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.." - உதயநிதி ஸ்டாலின் சொல்வது என்ன?

"நேரடியாக இந்தியைத் திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.தூர்தர்ஷன் தமிழ் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் அதன்... மேலும் பார்க்க

"அதிக குழந்தைகளைப் பெற்றெடுங்கள்" - சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து ஸ்டாலினும் பேச்சு; பின்னணி என்ன?

நேற்று (அக்டோபர் 20) ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தென்னிந்திய மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசியிருந்த நிலையில், இன்று (அக்டோபர் 21) தமிழ்நாடு முதல்வரும் அதை வ... மேலும் பார்க்க

Trump: 'பிரெஞ்ச் ஃபிரைஸ் செய்த டிரம்ப்' - அதிபர் தேர்தலுக்கு டிரம்ப் நூதனப் பிரசாரம்! | Video

'தேர்தல் வந்துட்டாப் போதும்... சின்ராசை கையில புடிக்க முடியாது' என்பதுபோல நம்மூர் வேட்பாளர்கள் வாக்குகளை அள்ளப் பல வித்தியாசமான பிரசார யுத்திகளில் இறங்குவார்கள். அதில் ஒன்றுதான் சமையல். அதாவது, அவரவர்... மேலும் பார்க்க

Canada-India: "ஆதாரத்தை இன்னும் கொடுக்கவில்லை.." - கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியத் தூதர் பதில்

சில ஆண்டுகளாகவே மோசமடைந்து வந்த இந்திய - கனடா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, கடந்த வாரம் இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றதன் மூலமாக இன்னும் மோசமாகியுள்ளது.கனடாவில் காலிஸ்தான் டைகர் பட... மேலும் பார்க்க

Andhra: "இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்குத்தான்.." - சந்திரபாபு நாயுடுவின் அடுத்த திட்டம்!

உலக நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. இந்நிலையில், 2023-ல் UNFPA -இன் உலக மக்கள்தொகை அறிக்கையின்படி, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முந்தியது. சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கையை ... மேலும் பார்க்க