செய்திகள் :

Kalan: "பெரிய சம்பளம் கிடைக்கும் என நினைத்தேன்; ஆனால்..." - நடிகர் அப்புகுட்டி கலகல பேச்சு

post image

`கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் படம் கலன். ராமலெட்சுமி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அப்புகுட்டி, தீபா, யாசர், சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அப்புகுட்டி

இதில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்கத் தலைவர் விஜயமுரளி, பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அந்தோணி தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அப்புகுட்டி, "இந்த மேடைக்கு வந்த எல்லோருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணம் மணிமாறன். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என அவர் கூறியதும் இயக்குநரைச் சந்தித்தேன். அவர் கதையைக் கூறும்போது, 'ஒரு 30 நாளுக்கு வேலை இருக்கும்... பெரிய சம்பளம் கிடைக்கும். வீட்டு வேலைகளை இதை வைத்து முடித்து விடலாம்' என நினைத்தேன். பெரும் எதிர்பார்ப்புடன் சென்ற எனக்கு, இந்தத் திரைப்படத்தில் 6 நாள் மட்டுமே வேலை என்றார்கள். அதையும் 4 நாளில் நான் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார்கள். ஆனால், படம் முழுவதும் நான் இருக்கிறேன். இதுதான் இயக்குநர் கலைபோல.

கலன் திரைப்படத்திலிருந்து

இந்தப் படத்தில் யாசருக்கு தாய்மாமனாக நடித்திருக்கிறேன். எனக்கு அக்காவாக தீபா நடித்திருக்கிறார். உண்மையில் எனக்கு அவர் அக்கா அல்ல தங்கைதான். ஆனால் அக்கா வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் வேலை செய்தவர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். நானே சோர்வாக இருந்தாலும், 'வாங்க சார்...' என அழைத்து இயக்குநர் அவருக்கான காட்சிகளை முடித்துவிடுவார். ஒருகட்டத்தில் அடித்துவிடுவாரோ என்றெல்லாம் பயந்தேன். மிகத் தைரியமான இயக்குநர். நல்ல படம்... நிச்சயம் இந்தப் படம் மக்களுக்குப் பிடிக்கும்" என நகைச்சுவையுடன் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Kalan: "நான் ஓவர் ஆக்டிங் செய்தாலும் அதை கண்டுக்காமல்..." - தீபா சங்கர் நகைச்சுவை பேச்சு

ராமலெட்சுமி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் கலன் திரைப்படத்தை, `கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அப்ப... மேலும் பார்க்க

Vijay: "அழைப்பு விடுக்காவிட்டாலும் TVK மாநாட்டிற்கு செல்வேன், ஏனென்றால்..!” - விஷால் சொல்வதென்ன?

விஜய் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும், வாக்காளராக தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நாடு... மேலும் பார்க்க

"என்னுடைய ஸ்டைல்லதான் படத்தை எடுப்பேனு முன்னாடியே சொல்லிட்டேன்..!"- வேட்டையன் குறித்து த.செ.ஞானவேல்

`ஜெய் பீம்' படத்தின் மூலம் இந்திய சினிமா முழுக்க கவனம் பெற்றவர் இயக்குநர் த.செ.ஞானவேல். அவரின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'.இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்ச... மேலும் பார்க்க

Irunga Bhai: ரஜினி `டு' சிவகார்த்திகேயன் - இது கோலிவுட்டின் 'இருங்க பாய்' வெர்ஷன்! | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

Cinema Roundup: நிகழ்கால கங்குவா காட்சிகள்; அமரனுக்கு 5 வருடம்! - இந்த வார டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கு பார்க்கலாம்.இயக்குநர் அர்ஜூன்!சமீபத்தில் சாண்டல்வுட்டில் வெளியான `மார்டின்' என்ற திரைப்படத்தின் கதையை எழுதியது நம் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்தான். `சேவகன்' திரைப்படத்தின்... மேலும் பார்க்க