செய்திகள் :

மறுவெளியீட்டில் 1000-வது நாள்! விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை!

post image

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மறுவெளியீட்டில் சாதனை புரிந்துள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான சிறந்த ஆல்பங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் காதலர்களின் விருப்பப் படமாகவே நீடிக்கிறது. திரைக்கு வந்த 14 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் நாளன்றும் சிறப்பு திரையிடலைக் கண்டு வருகிறது.

முக்கியமாக, சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் மறுவெளியீட்டில் இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் கொண்டாடுகிறது.

இந்த விஆர் திரையில் மட்டும் கடந்த 142 வாரங்களாக (2.75 ஆண்டு) இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: மனசாட்சி என்றால் என்ன? பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெடித்த சர்ச்சை!

இதுவரை, எத்தனையோ திரைப்படங்கள் மறுவெளியீட்டைக் கண்டாலும் இந்தியளவில் மறுவெளியீட்டில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்கிற சாதனையை பெற்றுள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா!

மகாராஜா - சிங்கம்புலி குறித்து விஜய்யின் பார்வை... ஆச்சரியப்பட்ட இயக்குநர்!

நடிகர் விஜய் மகாராஜா திரைப்படத்தைக் குறித்து சொன்ன கருத்துகளை இயக்குநர் நித்திலன் பகிர்ந்துள்ளார்.இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்... மேலும் பார்க்க

வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்.நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்குப் பின் கூலி படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தை தொடர்ந்து சென... மேலும் பார்க்க

சிம்பு - 49 படத்தின் இயக்குநர் இவரா?

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல... மேலும் பார்க்க

இன்று எப்படி? தினப்பலன்கள்

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.21-10-2024 (திங்கள் கிழமை)மேஷம்:இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தட... மேலும் பார்க்க

துளிகள்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி ஞாயிற்றுக்கிழமை முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்களே சோ்த்து, 410 ரன்கள் பின்தங்கியுள்ளது. புரோ கபடி லீக் போட்டியில... மேலும் பார்க்க

ஜொ்மனியுடன் ஹாக்கி டெஸ்ட்: இந்திய அணியில் வருண் குமாா்

ஜொ்மனிக்கு எதிரான 2 டெஸ்ட் ஹாக்கி ஆட்டங்களில் மோதவிருக்கும் இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.பாரீஸ் ஒலிம்பிக், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய போட்டிகளில் சோ்க்கப்படாத டிஃபெண்டா் வருண் குமா... மேலும் பார்க்க