செய்திகள் :

சல்மான்கானை குறிவைக்கும் கேங் - பிளாக்பக் மான்களுக்கும் பிஷ்னோய் இனத்துக்குமான 5 நூற்றாண்டு தொடர்பு!

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் 1998-ம் ஆண்டு `ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற போது ஜெய்ப்பூர் அருகே இரண்டு அபூர்வ வகை பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவத்திற்காக சல்மான் கான் இப்போது வரை பிரச்னையை சந்தித்துக்கொண்டிருக்கிறார். டெல்லியை சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த சில ஆண்டுகளாக சல்மான் கானுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறான். இதனால் சல்மான் கானால் நிம்மதியாக வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. எப்போதும் ஆயுதம் தாங்கிய போலீஸார், குண்டு துளைக்காத கார்களில்தான் சல்மான் கானால் வெளியில் செல்ல முடிகிறது. இதை சல்மான் கானே ஒரு முறை மிகவும் விரக்தியுடன் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் சல்மான் கான் வீட்டின் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏப்ரல் மாதம் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதோடு சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு வரும்போது அங்கு வைத்து அவரை கொலை செய்ய சதித்திட்டமும் தீட்டினர். அவர்கள் ஆறு பேர் பிடிபட்டுள்ளனர். வழக்கமாக சல்மான் கான் மும்பைக்கு வெளியில் பன்வெலில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அதுவும் படப்பிடிப்பு இல்லாதபோது அங்கு சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். ஆனால் லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டலால் பண்ணை வீட்டுக்கு செல்வதையே சல்மான் கான் கைவிட்டுள்ளார். இப்போது சல்மான் கானின் நெருங்கிய நண்பர் பாபா சித்திக்கை லாரன்ஸ் பிஷ்னோய் ஆள்கள் மும்பையில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். எல்லோருக்கும் மானை வேட்டையாடியதற்காகவா சல்மான் கான் இப்படி பிரச்னையை எதிர்கொள்கிறார் என்ற கேள்வி எழலாம்.

சல்மான் கான் வேட்டையாடிய பிளாக்பக் வகை மான்களுக்கும் பிஷ்னோய் இன மக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கடந்த 500 ஆண்டுகளாக இருக்கும் இத்தொடர்புதான் இன்றைக்கு சல்மான் கானுக்கு பிரச்னையாக வந்திருக்கிறது.

பிஷ்னோய் என்பது ஒரு வகையான இனமாகும். இந்த இனத்தை 15வது நூற்றாண்டில் குரு ஜம்பேஷ்வர் என்பவர்தான் 29 வகையான கொள்கைகளுடன் உருவாக்கினார். அவர் பிரதானமாக மக்களுக்கு விலங்குகள் மற்றும் பசுமையை பாதுகாப்பது குறித்து போதித்தார்.

பிஷ்னோய் என்பது மதம் கிடையாது. அது ஒரு வாழ்க்கை தத்துவம். அதில் விலங்குகள் மற்றும் மரங்களை பாதுகாப்பதுதான் பிரதான தத்துவம் ஆகும். இது குறித்து பிஷ்னோய் சமுதாய உறுப்பினர் ராம் ஸ்வரூப் என்பவர் கூறுகையில், ''விலங்குகளை பாதுகாக்க நாங்கள் உயிரைக்கூட விடுவோம். அதற்கு சல்மான் கான் வழக்கு உதாரணம் ஆகும். கைவிடப்படும் பிளாக்பக் வகை மான் குட்டிகளை எங்களது வீட்டுப்பெண்கள் தங்களது குழந்தைகளைப்போன்று வளர்க்கின்றனர்''என்றார்.

ஜம்பாஜி தன்னை பின்பற்றுபவர்களிடம் தான் தனது வெளிப்பாடாக பிளாக்பக் மான்களை கருதும்படி அறிவுறுத்தியதாக பிஷ்னோய் இனத்தவரின் பழங்கால கதைகளில் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் பிளாக்பக் மான்கள் ஆர்வலரும், விவசாயியுமான அனில் பிஷ்னோய் இது குறித்து கூறுகையில்,''நான் 10 ஆயிரம் பிளாக்பக் மற்றும் சிங்காரா வகை மான்களை காப்பாற்றி இருக்கிறேன். ஒரு முறை வேட்டைக்காரர் ஒருவர் 5 பிளாக்பக் மான்களை வேட்டையாடினார். அதனை தடுக்க முயன்ற எனது தலையில் துப்பாக்கியை வைத்தார். உயிரை பணயம் வைத்து மான்களை காப்பாற்றினேன். அதிர்ஷ்டவமாக வனத்துறையினர் வந்து அவரை கைது செய்தனர்'' என்றார்.

மான்கள் மட்டுமல்லாது மரங்களை பாதுகாப்பதிலும் பிஷ்னோய் இன மக்கள் தங்களது உயிரை கொடுத்துள்ளனர். 1730-ம் ஆண்டு ஜோத்பூர் அருகே கெஜர்லி என்ற கிராமத்தில் மரங்களை வெட்டினர். அப்போது ஜோத்பூர் மன்னராக இருந்த மகாராஜா அபய் சிங் தனக்கு புதிய கோட்டை கட்டினார். இதற்கு மரங்கள் தேவைப்பட்டது. எனவே மரங்களை வெட்டினர். இதனை எதிர்த்து பிஷ்னோய் சமுதாய மக்கள் அம்ரிதா தேவி தலைமையில் போராட்டம் நடத்தினர். அப்படி போராட்டம் நடத்தியவர்களில் பெண்கள் உட்பட 362 பேர் படுகொலை செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மரங்களை கட்டிப்பிடித்து அதனை வெட்டுவதை தடுத்து தங்களது உயிரை விட்டனர். எனவேதான் பிளாக்பக் மற்றும் சிங்காரா வகை மான்கள் பிஷ்னோய் சமுதாய மக்களுக்கு ஆன்மிகம் மட்டுமல்லாது கலாசார ரீதியாகவும் பிணைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சல்மான் கான்

பல நூற்றாண்டுகளாக, பிஷ்னோய்கள் இந்த விலங்குகளுடன் இணக்கமாக வாழ்ந்து வருவதோடு தீங்குகளிலிருந்தும் அவற்றை பாதுகாக்கிறார்கள். பிஷ்னோய்கள் மத்தியில் சுதந்திரமாகவும் பயமின்றியும் சுற்றித் திரியும் பிளாக்பக் மான்களுக்கு சூரியன் மறைந்த பிறகு பிஷ்னோய் இன மக்கள் உணவளிக்கின்றனர். தார் பாலைவன பகுதிகளில் மனித குடியிருப்புகளில் பிளாக்பக் மான்கள் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தாயிடமிருந்து பிரியும் பிளாக்பக் மான் குட்டிகளுக்கு பிஷ்னோய் இன பெண்கள் தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் அளவுக்கு அதனை தங்களது குழந்தையாக பாவிக்கின்றனர். பிளாக்பக் மான்களை பாதுகாப்பது பிஷ்னோய் இன மக்களின் அன்றாட மத கடமைகளில் ஒன்றாகும். அதனால்தான் சல்மான் கான் மீது பிஷ்னோய் இன மக்கள் இந்த அளவுக்கு வெறுப்புடன் இருக்கின்றனர். சல்மான் கான் மன்னிப்பு கேட்டால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் சல்மான் கான் தான் மான்களை வேட்டையாடவில்லை என்றும், எனவே மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறிவருகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Bishnoi : சல்`மான்' சர்ச்சையால் பேசுபொருளான `வன' பாதுகாவலர்கள்! - யார் இந்த பிஷ்னோய் இன மக்கள்?

லாரன்ஸ் பிஷ்னோய் இன்றைக்கு இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு மாஃபியாவாக வளர்ந்து நிற்கிறார். இந்த அளவுக்கு அறியப்படுவதற்கு காரணம் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததுதான். சல்மான... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: தமிழ்த்தாய் வாழ்த்து `டு' ஹமாஸ் தலைவர் கொலை... கேள்விகளுக்கு பதிலளிக்க ரெடியா?

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து படும்போது குறிப்பிட்ட வரி மட்டும் பாடாமல் விட்டது, பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மாணவர் புகார் மனு அளித்தது, உச்ச நீதிமன்றதி... மேலும் பார்க்க

Tamannaah Bhatia : பிட்காயின் மோசடி; நடிகை தமன்னாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை!

தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா பாட்டியா பிட்காய்ன் மோசடியில் தொடர்புடைய மொபைல் செயலியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. HPZ Token என்ற அந்த மொபைல் செயல... மேலும் பார்க்க

Pamban: கட்டுப்பாட்டு அறை டு 360 டிகிரி பாம்பன் ரயில் தூக்குப்பாலம்| Exclusive Photo Album

பாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bri... மேலும் பார்க்க

Salman Khan: `சல்மான் கான் மன்னிப்பு கேட்டால்...' - 25 ஆண்டு பகைக்கு பிஷ்னோய் சமூகம் புதிய தீர்வு!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது அங்கு அபூர்வ வகை மானை வேட்டையாடியதாக தெரிகிறது. அந்த வகை மான்களை வடமாநிலங்களில் வாழும் பிஷ்னோய் இன மக்கள் தெ... மேலும் பார்க்க

`இந்த பாம்பு என்ன கடிச்சிருச்சு டாக்டர்' - தோளில் பாம்புடன் நுழைந்த நபர்... பரபரப்பான மருத்துவமனை!

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல். இவரை கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே பிரகாஷ் மருத்துவமனைக்கு செல்லாமல் தன்னை கடித்த பாம்பை விரட்டி பிடித்... மேலும் பார்க்க