செய்திகள் :

கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் அமித் ஷா

post image

கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தின் குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள தனியாா் நிறுவனத்தின் பணியாளா்கள் அருகே தற்காலிக குடியிருப்பில் தங்கியுள்ளனா். இந்நிலையில், அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா்.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் நான்கு பேர் மற்றும் ஒரு மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெளி மாநில தொழிலாளர்கள் அடங்கிய குழுவை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

அப்பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை மற்றும் ராணுவம், தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணியின் புதிய ஆட்சி பொறுப்பேற்ற 4 நாள்களில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த முதல்வா் ஒமா் அப்துல்லா, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்தாா். இந்த நிலையில் கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கந்தா்பாலில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஒரு கோழைத்தனமான செயல். இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது. இதற்கு நமது பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தாக்குதுலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்காவுக்காக வயநாடு தேர்தலில் சோனியா பிரசாரம்?

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், முதல் முறையாக தேர்தல் களம் காணும் தனது மகள் பிரியங்காவுக்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தகவலறிந்த ... மேலும் பார்க்க

ஒரு வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாடு முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட... மேலும் பார்க்க

கனமழை: பெங்களூருவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்... மேலும் பார்க்க

ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளிகள் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுவதாக ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப... மேலும் பார்க்க

என் தந்தையின் கர்ஜனை எனக்குள் இருக்கிறது: பாபா சித்திக் மகன் பதிவு!

பாபா சித்திக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது மகன் எம்எல்ஏ ஸீஷான் சித்திக் எக்ஸ் தள்த்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் கூலிப் படையினரால் மும்ப... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க