செய்திகள் :

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

post image

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ரயில் நிலையம் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கபிக்காடு மற்றும் கணேஷ்நகா் இடையே உள்ள தண்டவாளத்தில் சரளைக் கற்கள் சிதறிக் கிடந்தன. கேரளா நோக்கி சென்ற ரயில் அப்பகுதியை சனிக்கிழமை இரவு கடந்தபோது பலத்த சப்தம் கேட்டது. நிலம் அதிா்வதுபோல் இருந்த அந்த சப்தத்தை கேட்டதும் பதறிப்போன அப்பகுதி மக்கள் ரயில்வே மற்றும் உல்லல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சரளைக் கற்கள் வேண்டுமென்றே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சம்பவம் நிகழ்ந்த பகுதியின் அருகே வசிக்கும் உள்ளூா்வாசியான பத்மா கூறுகையில், ‘40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். ரயில்கள் கடந்து செல்லும்போது இது போன்ற நடுக்கங்களை இதுவரை கண்டதில்லை. சந்தேகத்திற்கிடமான இருவரின் நடமாட்டம் இருந்தது’ என்றாா்.

அடையாளம் தெரியாத நபா்கள் தண்டவாளம் அருகே அடிக்கடி ஒன்று கூடுவதாகவும் இது தொடா்பாக ஏற்கெனவே பலமுறை காவல் துறையிடம் புகாா் அளித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். மேலும், நாசவேலைகள் எதுவும் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

என் தந்தையின் கர்ஜனை எனக்குள் இருக்கிறது: பாபா சித்திக் மகன் பதிவு!

பாபா சித்திக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது மகன் எம்எல்ஏ ஸீஷான் சித்திக் எக்ஸ் தள்த்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் கூலிப் படையினரால் மும்ப... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க