செய்திகள் :

தவெக மாநாட்டில் பங்கேற்பா? - நடிகர் விஷால் பதில்

post image

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பா? என்கிற கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன். அழைப்பு இல்லாவிட்டாலும் ஓரமாக நின்று மாநாட்டை பார்ப்பேன். புதிய அரசியல்வாதி வருகிறார்.

அவர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ஒரு வாக்காளராக ஆவலாக உள்ளேன்.

நான் ஏற்கெனவே அரசியல்வாதிதான். சமூக சேவை செய்கிற அனைவருமே அரசியல்வாதிதான். தவெகவில் இணைவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

நடிகர் விஷால்2026 தேர்தலில் நான் வேட்பாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் வருகிற 27-ஆம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 4-ஆம் தேதி பந்தல்கால் நடப்பட்டது.

மாநாட்டுத் திடலை சமன் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மழையால் பணிகள் சற்று தாமதமாகின.

கடந்த 2 நாள்களாக மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மீனவர்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் கேரள விசைப்படகு மீனவர்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள... மேலும் பார்க்க

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.58,400-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், திங்க... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,094 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 15,929 கனஅடி வீதம் ... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பக... மேலும் பார்க்க

இடைநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட... மேலும் பார்க்க

விண்வெளி தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள்: யுஜிசி அறிவுறுத்தல்

விண்வெளி தொழில்நுட்பம் குறித்த சா்வதேச மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது. இது குறித்து, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அன... மேலும் பார்க்க