செய்திகள் :

Bishnoi : சல்`மான்' சர்ச்சையால் பேசுபொருளான `வன' பாதுகாவலர்கள்! - யார் இந்த பிஷ்னோய் இன மக்கள்?

post image

லாரன்ஸ் பிஷ்னோய் இன்றைக்கு இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு மாஃபியாவாக வளர்ந்து நிற்கிறார். இந்த அளவுக்கு அறியப்படுவதற்கு காரணம் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததுதான். சல்மான் கான் ராஜஸ்தானில் மான்களை வேட்டையாடியதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரி இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இக்கொலை மிரட்டல்கள் மட்டுமல்லாது முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் என்பவரையும் கொலை செய்துள்ளனர். மான்களை வேட்டையாடியதற்காக லாரன்ஸ் பிஷ்னோய் ஏன் இந்த அளவுக்கு கோபப்படுகிறார் என்பது பிஷ்னோய் இன மக்களின் வரலாற்றை பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது. பிஷ்னோய் இன மக்கள் பிளாக்பக் மற்றும் சிங்காரா வகை மான்களை தங்களது தெய்வமாக கருதுகின்றனர். எனவேதான் பிளாக்பக் மான் வேட்டையாடப்பட்டவுடன் பிஷ்னோய் மக்கள் கொதித்து எழுந்துவிட்டனர்.

பிஷ்னோய் இன மக்கள்!

பிஷ்னோய் என்பது 500 ஆண்டுகளுக்கு முன்பு குரு ஜம்பேஷ்வர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு வகை வாழ்க்கை தத்துவம் ஆகும். வனம் மற்றும் விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறையை குரு ஜம்பேஷ்வர் உருவாக்கினார். அவரது கோட்பாடுகளை பின்பற்றி வாழும் மக்கள் இந்துக்கள்தான். ஆனால் அவர்கள் குரு ஜம்பேஷ்வரின் 29 கொள்ளைகளை பின்பற்றி அசைவம் சாப்பிடாமல் விலங்குகளின் பாதுகாவலர்களாக வாழ்கின்றனர். ராஜஸ்தானில் அதிக அளவில் வசிக்கும் பிஷ்னோய் மக்கள் விலங்குகளோடு ஒன்றி வாழ்கின்றனர். அவர்களது அன்றாட வாழ்க்கையோடும், கலாசாரத்தோடும் விலங்குகள், பிளாக்பக் வகை மான்கள் ஒன்றிணைந்து இருக்கிறது.

மான்கள் மட்டுமல்லாது அனைத்து வகையான விலங்குகளின் பாதுகாவலர்களாக பிஷ்னோய் மக்கள் இருக்கின்றனர். 500 ஆண்டுகளுக்கும் மேலாக மரங்கள், விலங்குகளின் பாதுகாவலர்களாக விளங்கும் பிஷ்னோய் இன மக்கள் உண்மையான சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் விலங்குகளுக்காகவே அர்ப்பணித்த சேவர் ராம், காடுகளில் காயம் அடையும் விலங்குகளை மீட்டுக்கொண்டு வந்து மறுவாழ்வு மையத்தில் வைத்து அதற்கு சிகிச்சை கொடுத்து சரியான பிறகு அதனை மீண்டும் காட்டில் விடுகிறார்.

இது குறித்து ராம் கூறுகையில், ''நாங்கள் விலங்குகளை எங்களது குழந்தைகளைப்போல் பார்த்துக்கொள்கிறோம். அதுதான் எங்களுக்கு குழந்தை பருவத்தில் இருந்து கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கிறார்.

இந்தியாவின் உண்மையான சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக கருதப்படும் பிஷ்னோய் மக்கள், விலங்குகள் மற்றும் மரங்களை பாதுகாக்க தங்களது உயிரையும் கொடுக்கின்றனர். குரு ஜம்பேஷ்வர் உருவாக்கிய கொள்கைப்படி பிஷ்னோய் இன மக்கள், கேஜரி எனப்படும் ஒரு வகை மரங்களை பாதுகாக்க தனது உயிரை விட்ட அம்ரிதா தேவியை தங்களது முன்மாதிரியாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தற்போது கேஜரி ராஜஸ்தான் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிஷ்னோய் மக்கள் ராஜஸ்தான் முழுக்க வாழ்ந்தாலும் அவர்கள் மொத்தம் 15 லட்சம் பேர் இருக்கின்றனர். ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனை கட்ட மரங்கள் தேவைப்படுவதாக கூறி ஆட்களை அனுப்பி மரங்களை வெட்டி வரும்படி கூறினார்.

இது குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் சுக்தேவ் கோத்ரா கூறுகையில், ''மரங்களை வெட்டிய போது அதனை அம்ரிதா தேவி கடுமையாக எதிர்த்தார். மரத்தை பிடித்துக்கொண்டு வெட்டக் கூடாது என்று தடுத்தார். அப்படி இருந்தும் மரத்தை வெட்டினர். உடனே மரத்தை அம்ரிதா தேவி கட்டிப்பிடித்துக்கொண்டார். உடனே அம்ரிதாவின் தலையையும் மரத்தையும் சேர்த்து வெட்டினர். அம்ரிதா தேவி மட்டுமல்லாது அவரது மூன்று மகள்களும் மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு தங்களது உயிரைவிட்டனர். அவர்கள் மட்டுமல்லாது பிஷ்னோய் இன மக்கள் 363 பேர் மரங்களை பாதுகாக்க தங்களது உயிரை தியாகம் செய்தனர். அவர்களின் நினைவாக அவர்களது பெயர்களை பிஷ்னோய் மக்கள் தங்களது வாரிசுகளுக்கு சூட்டுகின்றனர்''என்றார்.

உயிரை தியாகம் செய்தவர்கள் பிஷ்னோய் மக்களின் ஹீரோவாக இருக்கின்றனர். பிஷ்னோய் மக்கள் சமையல் செய்வதற்கு கூட விறகுகளை பயன்படுத்தாமல் மாட்டு சாணத்தை பயன்படுத்துகின்றனர். அதோடு சுத்த சைவமாக வாழ்கின்றனர்.

7 குழந்தைகளுக்கு தாயான சுஷ்மா காட்டில் காயம் அடைந்து கிடந்த விலங்குகளின் குட்டிக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்த்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''நான் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது பன்றிக்குட்டி ஒன்று காயம் அடைந்து கிடந்தது. உடனே அதனை வீட்டிற்கு எடுத்து வந்து எனது தாய்பால் கொடுத்து வளர்த்தேன். அதற்கு உடல் நிலை சரியான பிறகு காட்டில் விட்டேன்'' என்றார்.
இந்துக்களாக இருந்தாலும் பிஷ்னோய் இன மக்கள் இறந்தவர்கள் உடலை எரிக்க மரம் பயன்படுத்தப்படுகிறது என்ற ஒரே காரணத்திற்காக தங்களது உடலை புதைக்கின்றனர். பெரும்பாலும் விவசாயிகளாக இருக்கும் பிஷ்னோய் மக்கள் காடுகளில் ரோந்து செல்வதையும் பிரதானமாக கொண்டுள்ளனர்.

காட்டில் ரோந்து சென்று விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கின்றனர். நடிகர் சல்மான் கான் மான்களை வேட்டையாடிய பிறகு வழக்கறிஞர் ராம்பால் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் கண்காணிக்கவும் `பிஷ்னோய் டைகர் ஃபோர்ஸ்' என்ற ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறார். பிஷ்னோய் மக்கள் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் வரை 20 ஆண்டுகள் ஓயாமல் போராடினர். இன்னும் விலங்குகள், மரங்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர்.

Vikatan Weekly Quiz: தமிழ்த்தாய் வாழ்த்து `டு' ஹமாஸ் தலைவர் கொலை... கேள்விகளுக்கு பதிலளிக்க ரெடியா?

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து படும்போது குறிப்பிட்ட வரி மட்டும் பாடாமல் விட்டது, பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மாணவர் புகார் மனு அளித்தது, உச்ச நீதிமன்றதி... மேலும் பார்க்க

Tamannaah Bhatia : பிட்காயின் மோசடி; நடிகை தமன்னாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை!

தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா பாட்டியா பிட்காய்ன் மோசடியில் தொடர்புடைய மொபைல் செயலியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. HPZ Token என்ற அந்த மொபைல் செயல... மேலும் பார்க்க

Pamban: கட்டுப்பாட்டு அறை டு 360 டிகிரி பாம்பன் ரயில் தூக்குப்பாலம்| Exclusive Photo Album

பாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bri... மேலும் பார்க்க

Salman Khan: `சல்மான் கான் மன்னிப்பு கேட்டால்...' - 25 ஆண்டு பகைக்கு பிஷ்னோய் சமூகம் புதிய தீர்வு!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது அங்கு அபூர்வ வகை மானை வேட்டையாடியதாக தெரிகிறது. அந்த வகை மான்களை வடமாநிலங்களில் வாழும் பிஷ்னோய் இன மக்கள் தெ... மேலும் பார்க்க

`இந்த பாம்பு என்ன கடிச்சிருச்சு டாக்டர்' - தோளில் பாம்புடன் நுழைந்த நபர்... பரபரப்பான மருத்துவமனை!

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல். இவரை கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே பிரகாஷ் மருத்துவமனைக்கு செல்லாமல் தன்னை கடித்த பாம்பை விரட்டி பிடித்... மேலும் பார்க்க

சேலம்: முட்டைக்குள் ஓவியம்; புடவை நெசவு - ரசித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி!

தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆள... மேலும் பார்க்க