செய்திகள் :

சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

post image

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கான் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை முயற்சியில் இருந்து காப்பதற்கு பல்வேறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சல்மான் கானும் காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை முயற்சிக்கான காரணம் என்ன

பிஷ்னோய் மக்களின் குருவான 16 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறுவடிவமாக பிளாக்பக் மான்கள் கருதப்பட்டு வருகிறது; இந்த வகை மான்களுக்கு பிஷ்னோய் சமூகத்தினர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இந்த நிலையில், 1998 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்றிருந்த சல்மான் கான், செப். 28 ஆம் தேதியில் பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு, பின்னர் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்றிருந்தார், சல்மான் கான்.

இந்த சம்பவத்திலிருந்துதான், சல்மான் கானுக்கும் பிஷ்னோய் இனத்தவர்களுக்கும் மோதல் தொடங்கியது. பிளாக்பக் மான்களை சல்மான் கான் வேட்டையாடியது, பிஷ்னோய் இனத்தவர்களை சுமார் 25 ஆண்டுகளாக காயப்படுத்திக் கொண்டிருப்பதாக, பிஷ்னோய் இனத்தலைவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். சல்மான் கான் மன்னிப்பு கோரினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறினார்.

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

2018 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், ஒரு வழக்கு விசாரணைக்காக ஆஜரான லாரன்ஸ் பிஷ்னோய், தான் சல்மானைக் கொல்ல இருப்பதாக முதன்முறையாக தெரிவித்திருந்தார். அன்று தொடங்கிய மிரட்டல் இன்று வரையில், சல்மான் கானுக்கு லாரன்ஸ் கும்பலால் ஆபத்து தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 2023 முதல் ஏப்ரல் 2024-க்குள் சல்மான் கானை, தான் கொலை செய்யப்போவதாக, லாரன்ஸ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதியில் சல்மான் கான் வீட்டின் மீது இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினர்.

அப்போது, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்று, லாரன்ஸ் கும்பலை மண்ணோடு மண்ணாக்குவோம் எனக் கூறி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க:வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல: விஜய்

பிஷ்னோய் கும்பல் கூறிய காலக்கெடு முடிந்து விட்டதாக, காவல்துறையினர் பெருமூச்சு விட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் மீதான பிஷ்னோய் கும்பலின் கொலை முயற்சியைக் கைவிட வேண்டுமானால், ரூ. 5 கோடி தரவேண்டும்; இல்லையென்றால் சல்மான் கான் கொல்லப்படுவார் என்று மும்பை போக்குவரத்து காவல்துறையினருக்கு வாட்ஸ்ஆப் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பினை மேலும் பலப்படுத்தியுள்ளது, மும்பை காவல்துறை.

கொலை முயற்சி

பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாகக் கூறப்படும் காலத்தில் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு 5 வயதுதான் இருக்கும்; தற்போது பஞ்சாப் சபர்மதி மத்திய சிறையில் காவலில் இருந்தபோதிலும், சிறையிலிருந்தவாறே 700-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலை வழிநடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சல்மான் கானை கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 5 பேர் அளித்த வாக்குமூலத்தில், சல்மான் கானை கொல்வதற்காக தலா ரூ. 25 லட்சம் அளிக்கப்பட்டதாகவும், பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர் 24 மணி நேரமும் சல்மான் கானை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுக்குள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் புணே, ராய்காட், நவி மும்பை, தாணே, குஜராத்தில் மறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரைக் கொல்வதற்காக ஏ.கே. 47, ஏ.கே. 92, எம் 16, ஜிகானா முதலான ஆயுதங்களை பாகிஸ்தானிலிருந்து வாங்குவதாகத் திட்டமிட்டிருந்தனர்.

சல்மான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், கன்னியாகுமரி வழியாக இலங்கை சென்று, அங்கிருந்து வெளிநாடு செல்வதாகத் திட்டமிட்டிருந்தனர்.

பலத்த பாதுகாப்பு

நடிகர் சல்மான்கானுக்கு மத்திய அரசின் சார்பில் ஒய்-ப்ளஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 11 பாதுகாப்பு காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் துப்பாக்கி பயிற்சி பெற்ற திறமையான இரண்டு கமாண்டோக்களும் உள்ளனர்.

சல்மான் கான் வெளியில் செல்லும்போது ஒரு போலீஸ் வாகனம் அவரை பின் தொடர்ந்து செல்கிறது. சல்மான் கான் தங்கியுள்ள மும்பையில் உள்ள பாந்த்ராவின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் காவல்துறை முகாம்போல் மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருந்த பாதுகாப்பு போலீஸாருடன் கூடுதலாக ஒரு படை அமர்த்தப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் வகையில் நவீன சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அவரது வீட்டு வளாகத்தின் வெளிப்பகுதியில் அமருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பிஷ்னோய் கும்பலிடம் தற்காத்துக் கொள்ள, துபையிலிருந்து சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான குண்டு துளைக்காத காரை சல்மான் கான் இறக்குமதி செய்திருக்கிறார்; மிக அருகில் இருந்து சுட்டாலும் காரை குண்டு துளைக்காதாம்.

மேலும், கடந்த வாரம் நடைபெற்ற ஹிந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவதற்கு சென்ற சல்மான் கானுக்கு 60 முதல் 70 பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நிகழ்ச்சி அரங்கில் நுழைபவர்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பாதுகாப்புகளைத்தவிர, சல்மான் கான் ஒரு பிரேஸ்லெட்டைத்தான் பெரிதும் நம்புகிறார் என்றும் கூறப்படுகிறது; காரணம், பிரேஸ்லெட்டில் உள்ள பச்சையும் நீலமும் கலந்த பிரோசா என்ற கல்தான்.

இதையும் படிக்க:நெதன்யாகு எச்சரிக்கை... அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்!

``பிரோசா கல் அணிந்தால் எதிர்மறை விஷயங்கள் நம்மை அண்டாது. நம்மை நோக்கி எது வந்தாலும் இது உள்வாங்கிக் கொண்டு நம்மைக் காக்கும்” என்று முன்னதொரு பேட்டியில் சல்மான் கான் கூறியிருந்தார்.

இந்த பிரேஸ்லெட்டை சல்மான் கான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அணிந்துள்ளார். அவருடைய தந்தை அணிந்திருந்தை, தற்போது சல்மான் கான் வாங்கி அணிந்துள்ளார்.

கரப்பான் பூச்சிக்குகூட தீங்கிழைக்காதவர்

சல்மான் கானின் தந்தை சலீம் கான் ஒரு பேட்டியில் கூறியதாவது ``எனது மகன் சல்மான் கான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டார். இதுவரை எந்தவொரு விலங்கினையும் வேட்டையாடியதில்லை.

சல்மான் கானுக்கு வரும் மிரட்டல்கள் யாவும், அவரிடம் மிரட்டி பணம் பறிப்பதற்காக மட்டுமே வருகின்றன. கரப்பான் பூச்சியைக் கூட அவர் கொன்றதில்லை. வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’’ என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?

ஒடிஸாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநில பாஜக துணைத் தலைவரிடம் அவர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூ... மேலும் பார்க்க

நினைவேந்தல் நிகழ்வில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் பிரதீவ்ப் கோகய் என்பவரின் தாயாருக்கு நினைவேந்தல் நடைபெற்றுள... மேலும் பார்க்க

இந்தூருக்கு விரைவில் முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் டபுள் டெக்கர் பேருந்து சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் மேயர் புஷ்யமித்ர பார்கவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 60 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலி

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தௌல்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து சனிக்கிழமை இரவு 11 மணியள... மேலும் பார்க்க

ரயில்வே காலி பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகள் போதவில்லையா? ப. சிதம்பரம் கேள்வி!

ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சரிவர முயற்சிகள் எடுக்காதது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் பெரும்பாலான இடங்க... மேலும் பார்க்க