செய்திகள் :

ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின் மீது தாக்குதல்!

post image

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின்மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (அக். 20) தாக்குதல் நடத்தியது.

இதில், ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த தலைமைத் தரவரிசைப் பட்டியலில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சுரங்கத்தில் செயல்பட்டுவந்த ஆயுத சரிபார்ப்பு தளத்தையும் முற்றிலும் அழித்துள்ளது.

லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லாவில் முக்கிய அதிகாரிகளான எல்ஹாக் அப்பாஸ் சலாமேஹ், ராச்சா அப்பாஸ் இச்சா மற்றும் அஹமது அலி ஹசின் ஆகிய மூன்று பேர் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இலக்கில் பெய்ரூட் சுரங்கத்தில் செயல்பட்டுவந்த ஆயுத சரிபார்ப்பு தளமும் அழிக்கப்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டது.

காஸா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைப் பிரிவினருக்கும் இடையிலான போ... மேலும் பார்க்க

உக்ரைனில் 500 டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

உக்ரைன் எல்லைக்குள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று (அக். 20) குற்றம் சாட்டினார். மேலும், 20 வெவ்வேறு வகையான ஏ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 87 பேர் பலி!

காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 87 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற தகவலும... மேலும் பார்க்க

தென் கொரியாவுக்கு 20 குப்பை பலூன்கள்: மீண்டும் அனுப்பியது வட கொரியா

தென் கொரியாவுக்கு குப்பைகள் கட்டப்பட்ட பெரிய அளவிலான 20 பலூன்களை வட கொரியா மீண்டும் அனுப்பியுள்ளது.சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை குப்பைகள் கட்டப்பட்ட பலூன்கள் எல்லையில் அனுப்பப்பட்... மேலும் பார்க்க

நெதன்யாகு எச்சரிக்கை... அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்!

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் வசிக்கும் மக்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் இருக்கும் பகுதிகளிலிருந்து விரைவில் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன் மூலம், அடுத்தகட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாரா... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மேலும் 2 புதிய போலியோ வழக்குகள்; மொத்த பாதிப்பு 39-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் மேலும் 2 புதிய போலியோ வழக்குகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின... மேலும் பார்க்க