செய்திகள் :

லடாக் ஆதரவாளர்கள் 15 நாள்களாக உண்ணாவிரதம்: பிரதமரை சந்திக்க கோரிக்கை!

post image

புதுதில்லியில் 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பருவநிலை விஞ்ஞானி சோனம் வாங்க்சக் மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

லடாக் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் மேம்பாட்டுக்காக, அரசமைப்பு ரீதியாக லடாக் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கபட வேண்டுமென்ற முக்கிய கோரிக்கையை மத்திய அரசிடம் சோனம் வாங்க்சக் மற்றும் லடாக்கை சேர்ந்த மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்மூலம், அங்குள்ள மக்கள் தங்கள் நிலத்தையும், கலாசாரா அடையாளத்தையும் பாதுகாக்க முடியுமென்பதே அவர்களின் கோரிகையாக உள்ளது. இந்த கோரிக்கைக்கு லடாக் பிராந்தியத்தில் பரவலாக ஆதரவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், லடாக் விவகாரத்தில் பிரதமர் உள்பட அமைச்சர்களை சந்தித்து முறையிட தஙக்ளுகு அனுமதி மறுக்கப்படுவதாக சோனம் வாங்க்சக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் வட எல்லையில் அமைந்துள்ள மலைப்பிரதேசமன லடாக்கின் ‘லே’ பகுதியிலிருந்து தலைநகர் புது தில்லிக்கு, நடைபயணமாகச் சென்றடைந்த சோனம் வாங்க்சக், கடந்த மாதம் அவரது ஆதரவாளர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார், அதன்பின் விடுதலையும் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தனக்கெதிரான கைது நடவடிக்கைக்கு பின், கடந்த 5-ஆம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தில்லி லடாக் பவனில் தனது ஆதரவாளர்கள் சுமார் 25 பேருடன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அவர், நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவரை(பிரதமர்) சந்தித்து தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைக்க நேரம் கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தில்லியில் உண்ணாவிரதமிருந்து வரும் வாங்சக் கூறியதாவது, “மூத்த குடிமக்கள், பெண்கள், ஓய்வுபெற்ற ராணுவத்தினர் உள்பட 150 பேர், நாட்டின் ஒரு மூலையிலிருந்து புறப்பட்டு தில்லிக்கு வந்தடைந்துள்ளனர். தில்லி வந்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜனநாயகத்துக்கு சோகமான தருணம் இது.

இவற்றுக்கெல்லாம் மத்தியில், அரசு செவிசாய்க்கக்கூட நேரம் ஒதுக்கவில்லை. இந்த நிலையில், இதை ஜனநாயகமென எப்படி அழைப்பது?

தேர்தல்கள் மட்டுமே ஒரு நாட்டை ஜனநாயகமாக மாற்றிவிடாது. நீங்கள் மக்களுக்கும் மக்களின் குரலுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, “தேசப்பற்றாளர்கள் ’தேச விரோதிகள்’ என சமூக வலைதளங்களில் அழைக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. சமூக வலைதளப் பயன்பாட்டாளர்கள் தேச விரோதிகளை தேசப்பற்றாளர்களாக மாற்ற உழைக்க வேண்டுமே தவிர இப்படி நடந்துகொள்ளக்கூடாது” என்றும் பேசியுள்ளார்.

இந்த நிலையில், சோனம் வாங்சக்குக்கு ஆதரவாக இன்று (அக். 20), அனைத்து இந்திய மாணவர்கள் கூட்டமைப்பை(ஏஐஎஸ்ஏ) சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் அணிதிரண்டு, தில்லியில் உள்ள லடாக் பவன் வெளியே போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாணவர்களை அங்கிருந்து குண்டுக்கட்டாக காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: மருத்துவர் உள்பட 6 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 200 பேருக்கு உடல்நலக் குறைவு

துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டதால் 200 பேருக்கு ஒவ்வாமை உண்டாகி உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பஸ்கோரியா கிராமத்தில் துக்க நிகழ்ச... மேலும் பார்க்க

ராஜஸ்தான் கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் பலி: மோடி இரங்கல்

ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்தி மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ல... மேலும் பார்க்க

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

தனது மனைவி நலமுடன் வாழ வேண்டுமென்பதற்காக உண்ணா நோன்பிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார் பாஜக எம்.பி. ஒருவர்.கணவர் ஆரோக்கியமாக நெடுநாள் வாழ வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் இல்லத்தரசிகள் கடைப்பிடிக்கு... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே கருதுகிறது ராகுல் குடும்பம்: நவ்யா ஹரிதாஸ்

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே மட்டுமே ராகுல் காந்தி குடும்பம் கருதுவதாகவும், இதனை அந்த தொகுதி மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக பாஜக வேட்பாளா் நவ்யா ஹரிதாஸ் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

இறையருளால் மோடியைப் போன்ற நல்ல தலைவர்கள் உள்ளனர் -காஞ்சி சங்கராச்சாரியார்

பிரதமரின் தொகுதியில் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கரா கண் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று(அக். 20) ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்... மேலும் பார்க்க