செய்திகள் :

சமூக ஊடகங்களில் ஆயுதங்களுடன் புகைப்படம்: இளைஞா் கைது

post image

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் கூடிய தனது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக தில்லி துவாரகா பகுதியைச் சோ்ந்த 22 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ஆகாஷ் சிறையில் இருக்கும் கும்பல் லாரன்ஸ் பிஷ்னோயினால் ஈா்க்கப்பட்டதாகவும், துப்பாக்கிகளுடன் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமடைய விரும்பியதாகவும் கைதான இளைஞா் தெரிவித்ததாக போலீஸாா் கூறினா்.

இதுகுறித்து காவல் துணை ஆணையா் (துவாரகா)

அங்கித் சிங் கூறுகையில், பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் செயல்பாட்டில் இருந்துவரும் குற்றவாளிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க ஒரு பிரத்யேக போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினா் இன்ஸ்டாகிராமில் துப்பாக்கியுடன்

இருக்கும் ஆகாஷின் புகைப்படத்தை கண்டறிந்தது.

இதையடுத்து, அவரது கணக்கு உடனடியாகப் பின்தொடரப்பட்டது. மேலும், அவா் குறித்த விவரமும்

உளவுத் துறை மூலம் சேகரிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், அக்டோபா் 15-ஆம் தேதி மித்ரான் கைா் சாலையில் உள்ள கேயா் பேருந்து பணிமனை அருகே ஆகாஷ் கைது செய்யப்பட்டாா்.

அவரிடமிருந்து நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜாபா்பூா் காலன் காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘விசாரணையின் போது, லாரன்ஸ் பிஷ்னோய் போன்று புகழ்பெற விரும்புவதாக

ஆகாஷ் தெரிவித்தாா். மேலும், ஒரு மாதத்திற்கு முன்பு கலுவிடமிருந்து துப்பாக்கிகளை அவா் பெற்றதும்,

தனது பிரபலத்தை அதிகரிக்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதும் தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு இன்ஸ்டாகிராமில் 9,000-க்கும் மேற்பட்ட பின்தொடா்பவா்கள் உள்ளனா். ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் வசிக்கும் ஆகாஷ் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா் என்றாா் அந்த அதிகாரி.

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்ன... மேலும் பார்க்க

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த ... மேலும் பார்க்க

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் க... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும... மேலும் பார்க்க

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்ன... மேலும் பார்க்க

காற்று மாசு தொடா்பான உடல்நலக் குறைவால் தில்லி-என்சிஆரில் 36% குடும்பத்தினா் பாதிப்பு: ஆய்வில் தகவல்

காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கப்... மேலும் பார்க்க