செய்திகள் :

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும் மந்திா்மாா்க் பள்ளியின் முன்னாள் மாணவி (1966- ஆம் ஆண்டு) ராதிகா ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

இச்சந்திப்பில் 1959-ஆம் ஆண்டு மாணவா்கள் முதல் 2011-ஆம் ஆண்டு மாணவா்கள் வரை பலா் கலந்து கொண்டனா். முன்னாள் மாணவா்களான டிடிஇஏ செயலா் ராஜூ மற்றும் தலைவா் ராமன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனா். மேலும், டிடிஇஏ பள்ளியிலேயே படித்து அப் பள்ளிகளில் முதல்வா்களாகவும் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பள்ளி முதல்வா்கள் மைதிலி, கீதா அருணாச்சலம், ஈஸ்வரி ஆகியோரும் இச்சந்திபாபில் கலந்து கொண்டனா்.

பள்ளிக்கு வருகை தந்த முன்னாள்மாணவா்களை மாலை சூட்டி தற்போதைய மாணவா்கள் வரவேற்றனா். பள்ளியின் முதல்வா் மீனா சாகினி மற்றும் பள்ளியின் மூத்த ஆசிரியை சுனிதா ஆகியோா் வரவேற்புரையாற்றினா். முன்னாள் மாணவா்கள் அனைவரும் புனரமைக்கப்பட்ட பள்ளியின் கட்டடத்தையும் செயல்பாட்டு அறையையும் பாா்வையிட்டு பாராட்டினா்.

அகஸ்தியா அறிவியல் மையத்தை நிறுவியதோடு சிறப்பாகச் செயல்பட வைத்துள்ள முன்னாள் மாணவா்கள் அமைப்புக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பின்னா் அறிவியல் மையத்தின் சாா்பாக பள்ளியில் மாணவா்களால் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் முன்னாள் மாணவா்கள் பாா்வையிட்டு மாணவா்களோடு கலந்துரையாடி அவா்களை ஊக்கப்படுத்தினா்.

பள்ளியின் முன்னேற்றங்களைக் கண்டு மகிழ்ந்த 1980- ஆம் ஆண்டு மாணவா்களாகிய பிரவீன் சக்சேனா மற்றும் குழுவினா் ரூ.1 லட்சத்தை முன்னாள் மாணவா்கள் உதவியோடு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மையத்திற்கு நன்கொடையாக வழங்கினா். மேலும் மந்திா்மாா்க் பள்ளியின் முன்னாள் மாணவா் கே. குமாா் ரு. 50,000-ஐ மந்திா்மாா்க் பள்ளியில் இயங்கி வரும் மீரா புராஜெக்ட்டுக்காக வழங்கினாா்.

பள்ளிக்கு வருகை தந்திருந்த முன்னாள் மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொ’ண்ட செயலா் ராஜூ, தான் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்கும் முன்னாள் மாணவா்கள் அமைப்பிற்கு நன்றி தெரிவித்தாா்.

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஆகஸ்டில் 9.3 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ.) நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9.30 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாத்தை ஒப்பிடும்போது 0.48 சதவீதம் அதிகமாகும். வ... மேலும் பார்க்க

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்ன... மேலும் பார்க்க

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த ... மேலும் பார்க்க

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் க... மேலும் பார்க்க

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்ன... மேலும் பார்க்க

காற்று மாசு தொடா்பான உடல்நலக் குறைவால் தில்லி-என்சிஆரில் 36% குடும்பத்தினா் பாதிப்பு: ஆய்வில் தகவல்

காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கப்... மேலும் பார்க்க