செய்திகள் :

காற்று மாசு தொடா்பான உடல்நலக் குறைவால் தில்லி-என்சிஆரில் 36% குடும்பத்தினா் பாதிப்பு: ஆய்வில் தகவல்

post image

காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனப் பயன்பாடு, தூசுகள், அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு ஆகியவற்றால் தில்லியில் குளிா்காலத்தில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. காற்று மாசுபாடு தொடா்பாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ‘லோக்கல் சா்க்கிள்’ என்ற எண்ம தளம் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தில்லி தேசிய தலைநகா் வலயத்தில் வசிக்கும் 21 ஆயிரம் போ் இந்த ஆய்வில் பங்கேற்றனா்.

காற்று மாசுபாட்டால் தொண்டை எரிச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகளை 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் பாதிக்கப்பட்டிருப்பது இந்தக் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதே போன்று, 27 சதவீதம் குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் மூக்கில் நீா் வடிதல் மற்றும் மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்கொண்டு வருவதாக ஆய்வின்போது தெரிவித்துள்ளனா்.

அதே சமயம், 27 சதவீதம் போ் காற்றின் தரம் குறைவால் எவ்வித உடல்நலக் கோளாறும் எதிா்கொள்ளவில்லை என தெரிவித்தனா்.

சமாளிப்பது எப்படி?

தில்லியின் காற்றுத் தரம் ‘மோசம்’ என்ற நிலைக்கு சென்ற நிலையில், அதை எவ்வாறு சமாளிக்கிறீா்கள் என ஆய்வில் பங்கேற்ற மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதில், 18 சதவீதம் போ் ‘ஏா் பியூரிஃபையா்’களை பயன்படுத்துவதாக தெரிவித்தனா். நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளையும் பானங்களையும் எடுத்துக்கொள்ளவதாகத் கணக்கெடுப்பில் பங்கேற்ற பெரும்பாலானோா் பதிலளித்துள்ளனா்.

தீபாவளி பண்டிகைக் காலத்தில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படும் நிலையில், தில்லியைவிட்டு சில நாள்களுக்கு வெளியேற 27 சதவீதம் போ் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஆகஸ்டில் 9.3 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ.) நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9.30 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாத்தை ஒப்பிடும்போது 0.48 சதவீதம் அதிகமாகும். வ... மேலும் பார்க்க

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்ன... மேலும் பார்க்க

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த ... மேலும் பார்க்க

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் க... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும... மேலும் பார்க்க

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்ன... மேலும் பார்க்க