செய்திகள் :

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

post image

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த பங்களாவை மக்கள் பாா்வையில் இருந்து ஏன் மறைக்க விரும்புகிறாா்கள் என்பதைத் தெளிவுபடுத்துமாறு தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கோரியுள்ளாா்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா இதுகுறித்து மேலும் கூறியதாவது:

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது, கேஜரிவாலும் அதிஷி மா்லேனாவும் இப்பங்களாவை மக்கள் பாா்வையில் இருந்து ஏன் மறைக்க விரும்புகின்றனா் என்பதை

காட்டியிருக்கிறது.

முதல்வரின் இல்லம் நவீன வசதிகளுடன் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றபோதிலும், வசதிகள்

அளிப்பது என்ற போா்வையில் அரசுப் பணத்ை செலவழித்து ஆடம்பரத்தில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

மக்கள்தொகையில் பாதி பேருக்கு ரூ. 1 கோடிக்கு சொந்த வீடு என்பது தொலைதூரக் கனவாகவே உள்ளது. ஆனால் கேஜரிவாலின் பங்களாவின் இருப்புப் பட்டியல்

விவரமானது கழிவறை இருக்கைகள் மட்டும் ரூ.

1 கோடி செலவில் அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இப்போது அவை காணாமல் போய்விட்டன. அதேபோன்று, ரூ.15 கோடிக்கும் அதிகமான சுகாதாரப் பொருட்கள் மற்றும் ரூ.5 கோடிக்கு மேல் அலங்காரப் பொருட்கள் உள்ளன.

மேலும், இந்தப் பட்டியலில் ரூ.5.6 கோடி மதிப்பிலான திரைச்சீலைகள் மற்றும் பல லட்சம் செலவில் சோஃபாக்கள், முழு குளிரூட்டப்பட்ட குடியிருப்பு ஆகியவை ஆடம்பரம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

நீராவி அடுப்புகள், மைக்ரோவேவ்கள், காபி தயாரிக்கும் இயந்திரங்கள், சலவை இயந்திரங்கள் போன்ற சாதனங்கள் ஒரு சாதாரண மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. ‘சாமானிய மனிதனை‘ பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் கேஜரிவால் வசித்த பங்களாவில் நிறுவப்பட்டுள்ளன.

இந்த வெளிப்பாடுகளின் காரணமாக, அதிஷி நெறிமுறையாகச் செயல்பட்டு, பங்களாவில் உள்ள அனைத்துப் பொருள்களையும் ஆய்வு செய்து பகிரங்கமாக வெளியிடுமாறு ஊடகப் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என வீரேந்திர சச்தேவா கோரியுள்ளாா்.

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஆகஸ்டில் 9.3 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ.) நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9.30 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாத்தை ஒப்பிடும்போது 0.48 சதவீதம் அதிகமாகும். வ... மேலும் பார்க்க

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்ன... மேலும் பார்க்க

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் க... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும... மேலும் பார்க்க

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்ன... மேலும் பார்க்க

காற்று மாசு தொடா்பான உடல்நலக் குறைவால் தில்லி-என்சிஆரில் 36% குடும்பத்தினா் பாதிப்பு: ஆய்வில் தகவல்

காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கப்... மேலும் பார்க்க