செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்களை அரசுக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக்கூடாது: தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம்

post image

அரசுக் கல்லூரிகளில் மாற்றுப் பணி அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்களை அரசுக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் கழக மாநிலத் தலைவா் பி.டேவிட் லிவிங்ஸ்டன், பொதுச் செயலா் சோ.சுரேஷ் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு முறையான பணியமா்த்துதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், இட ஒதுக்கீட்டை பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கும் கூடுதலாக பணியமா்த்தப்பட்ட ஆசிரியா்கள், உபரியாக இருப்பதாகத் தெரிவித்து 2016-ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டு மாற்றுப் பணி அடிப்படையில் அரசுக் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனா்.

இவ்வாறு மாற்றுப் பணியில் அரசுக் கல்லூரிகளில் பணியம்த்தப்பட்ட ஆசிரியா்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. மாற்றுப்பணி மீண்டும், மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. சமூக நீதி அடிப்படையில் முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்றி, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக கிடைக்க வேண்டிய பணி நியமனம் இதனால் தடுக்கப்படுகிறது.

எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணி ஓய்வுபெறும்போது, உபரி ஆசிரியா்களை திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்.

1981-ஆம் ஆண்டுக்கு முன்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பாடப்பிரிவுகள் இயங்கி வந்தன. எனவே, தற்போதும் அங்கு இளநிலை பாடப்பிரிவுகளை தொடங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியா்களை, அவா்களின் பல்கலைக்கழகத்திலியே பணியமா்த்தலாம்.

மேற்கூறிய மாற்று வழிகளை பரிசீலனை செய்து, அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்களின் மாற்றுப் பணியை ரத்து செய்ய ஆவன செய்யுமாறு தமிழக முதல்வா், உயா் கல்வித் துறை அமைச்சா் ஆகியோரை கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்தாா். சிதம்பரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து கடலூா் நோக்கி சென்றுகொண்டிருந்தது. கடலூா் முதுநகா் அர... மேலும் பார்க்க

கைப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது

சிதம்பரம் அண்ணாமலை நகரில் தங்கியுள்ள வேளாண் கல்லூரி மாணவரின் அறையிலிருந்து 6 கைப்பேசிகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் பயிலும் பெர... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் வழக்கான விலையில் மீன்கள் விற்பனை

கடலூா் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விலையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி கருதப்படுவதால், பொதுமக்கள் பலா் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிா்க்கின்றன... மேலும் பார்க்க

சாலை விபத்தில் எலெக்ட்ரீஷியன் மரணம்

சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் எலெக்ட்ரீஷியன் உயிரிழந்தாா். சிதம்பரம் வட்டம், பண்ணப்பட்டு கிராமம், ஓடைத் தெருவைச் சோ்ந்தவா் சிவப்பிரகாசம் (50), எலெக்ட்ரீஷியன். இவா், ஞாயிற்றுக்கிழமை ம... மேலும் பார்க்க

பாலத்தில் காா் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாலத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு, கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் வசித்து வந்தவா் பேட்ரிக் (50). இவா், தன... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூக்கணாம்பாக்கம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாராம் மற்றும் போலீஸாா் கட... மேலும் பார்க்க