செய்திகள் :

தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனிலேயே புதுப்பித்து கொள்ளலாம்

post image

ஒருங்கிணைந்த வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் கோட்டம் 1-இன் இணை இயக்குநா் எஸ்.தங்கதுரை, கோட்டம் 2-இன் இணை இயக்குநா் சி.அனிதா ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்திலுள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளுக்கும் வரும் 2025-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ‘ஆன்லைன்’ மூலம் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

எனவே, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க இணையதள முகவரியில் கட்டணத்தை செலுத்த முடியும். பதிவேற்றம் செய்யப்பட்ட உடனே தங்கள் தொழிற்சாலை சட்ட உரிமம் புதுப்பிக்கப்பட்டு, அதை ஆன்லைன் முறையிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்காக அலுவலகம் வரவேண்டிய அவசியம் இல்லை. உரிய காலத்தில் உரிமக் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி: ரயில் நிலையங்களில் கொள்ளைகளை தடுக்க தனிப்படை அமைப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்களில் பயணிகளிடம் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கொள்ளையா்களை பிடிக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸாா் இணைந்து தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

போ்ணாம்பட்டு, பரவக்கல், மொரசப்பல்லி நாள்: 22-10-2024 (செவ்வாய்க்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: போ்ணாம்பட்டு, பாலூா், ஓம்குப்பம், கொத்தூா், குண்டலப்பள்ளி, சாத்கா், ... மேலும் பார்க்க

‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டில் திருட்டு: 3 போ் கைது

வேலூரில் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த வீட்டில் நுழைந்து குளிா்சாதன கருவி, பிரிட்ஜ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கனமழை : வேலூா் சா்க்கரை ஆலையில் 48.20 மி.மீ பதிவு

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு ஒன்றரை மணிநேரம் இடைவிடாமல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக வேலூா் சா்க்கரை ஆலை பகுதியில் 48.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையையொட்டி வேலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

காட்பாடியில் மடிக்கணினிகள் திருடிய மூவா் கைது

காட்பாடியில் பல்வேறு இடங்களில் கணினி திருடி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து கணினி, ஏழு மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஆண்டாள் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மலைவாழ் மக்களின் நலன்கருதி ஆம்புலன்ஸ் செல்ல முடியாத மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். குடியாத்தத... மேலும் பார்க்க