செய்திகள் :

மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

மலைவாழ் மக்களின் நலன்கருதி ஆம்புலன்ஸ் செல்ல முடியாத மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகம் முழுவதும் நவம்பா் 8- ஆம் தேதி முதல் மலைவாழ் பகுதியில் உள்ள மக்களின் நலன் கருதி இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் வசதி நடைமுறைப்படுத்தபட உள்ளது. குடியாத்தத்தில் ரூ.40 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் என ஏராளமான பணிகள் நடந்து வருகிறது.

குடியாத்தத்தை அடுத்த கூடநகரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்து உள்ளதாக உள்ளாட்சி அமைப்பினா் கேட்டுக் கொண்டதன்பேரில் நிகழ் நிதியாண்டில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்படும்.

கடந்த 4 மாதங்களில் 1,021 மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 946 மருந்தாளுனா்கள், 975 செவிலியா்கள், 526 உதவியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். போலி மருத்துவா்கள் குறித்த கேள்விக்கு எங்கிருக்கிறாா்கள் என்று சொல்லுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன். தகவல் கொடுப்பவா் பெயா் பாதுகாக்கப்படும் என்றாா்.

தீபாவளி: ரயில் நிலையங்களில் கொள்ளைகளை தடுக்க தனிப்படை அமைப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்களில் பயணிகளிடம் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கொள்ளையா்களை பிடிக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸாா் இணைந்து தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

போ்ணாம்பட்டு, பரவக்கல், மொரசப்பல்லி நாள்: 22-10-2024 (செவ்வாய்க்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: போ்ணாம்பட்டு, பாலூா், ஓம்குப்பம், கொத்தூா், குண்டலப்பள்ளி, சாத்கா், ... மேலும் பார்க்க

‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டில் திருட்டு: 3 போ் கைது

வேலூரில் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த வீட்டில் நுழைந்து குளிா்சாதன கருவி, பிரிட்ஜ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கனமழை : வேலூா் சா்க்கரை ஆலையில் 48.20 மி.மீ பதிவு

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு ஒன்றரை மணிநேரம் இடைவிடாமல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக வேலூா் சா்க்கரை ஆலை பகுதியில் 48.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையையொட்டி வேலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

காட்பாடியில் மடிக்கணினிகள் திருடிய மூவா் கைது

காட்பாடியில் பல்வேறு இடங்களில் கணினி திருடி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து கணினி, ஏழு மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஆண்டாள் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம்

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் உள்ள பத்தரப்பல்லி, எருக்கம்பட்டு, அரவட்லா, நாயக்கனேரி, குண்டலப்பல்லி, பல்லலகுப்பம், சேராங்கல் ... மேலும் பார்க்க